Sunday, April 14, 2013"திறப்புவிழா"    திரைபடத்தின் FACEBOOK COVER DESIGNS
Friday, March 15, 2013

" திறப்புவிழா "

                                               "  திறப்புவிழா " திரைப்படத்தின் 

                                                    FACE BOOK COVER PAGE

Friday, December 21, 2012திறப்பு விழா  திரைப்பட ஸ்டில்ஸ்


"உன் மார்பு தரையில

கோலமிட்டு பழகுறேன்.........."
திறப்பு விழா    திரைப்பட ஸ்டில்ஸ்

தண்ணி கொஞ்சம் -ஊத்து, 
இந்த 
முத்த செடிக்குதான்....,
Wednesday, December 12, 2012


திறப்பு விழா    திரைப்பட ஸ்டில்ஸ்

"அக்டோபர் மழையில" 
"அன்பே உன் அழகுல"

 பாடல் பதிவின்போதுதிறப்பு விழா  திரைப்பட ஸ்டில்ஸ்

சின்னத்திரை fame முனீஸ்ராஜா ,முதன்முதலாக பெரியத்திரையில் நமது "திறப்புவிழா "திரைப்படத்தில் அறிமுகமாகி காமெடியில் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார், அவரை பெரியத்திரையில் அறிமுகப்படுத்தியதில்INFAR FILMS&TEAM பெருமை படுகிறது...

திறப்பு விழா     திரைப்பட த்தில்  பாடல் வரிகள்             "நிலவு கொஞ்சும் நீல ராத்திரி அதில் 
              நீயும் நானும் பொம்மை மாதிரி...!!!!"

"திறப்பு விழா" திரைப்படத்தில் அண்ணன்  நா.முத்துக்குமார் எழுதி ராகுல்நம்பியார்-- சின்மயி பாடிய " தட தட ரயில்" பாடல்...:)

          

திறப்பு விழா    படப்பிடிப்பின்போது   மக்கள் கூட்டத்தில்  படப்பிடிப்பு"இந்தா இந்தா வாங்கிக்கய்யா ஜாதகத்தை
இப்பொழுதே மாத்திக்கலாம் தாம்பூலத்த" -
என்ற அண்ணன் பழநிபாரதியின் பாடல் பதிவின்போது பிண்ணனிபாடகி 
 செல்வி சைந்தவி, இசையமைப்பாளர் வசந்த ரமேஷ், ஒலிகோர்வையாளர் சின்னப்பதாஸ் ஆகியோர்.

Sunday, November 11, 2012

திறப்புவிழா ஷூட்டிங் ஸ்டில்ஸ்


திறப்புவிழா படத்தின் நடன இயக்குனர் ராம்சிவா, நிர்வாகத்தயாரிப்பாளர் ரத்னவேல், உதவி இயக்குனர் செந்திலுடன் நான்...

திறப்பு விழா திரைப்பட ஸ்டில்ஸ்


என் கதாநாயகன் ஜெயாஆனந்த், என் கதாநாயகி மணிஷாஜித், நான் உதவி இயக்குனராக இருந்தபோதும்,இயக்குனராக இருக்கும்போதும் வழிநடத்தி செல்லும் ஆசான் எனது வலதுகரமாக என்றும் இருக்கும் கமல் சார் & எனது படக்குழுவினர்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எனது 15 வருட உதவி இயக்குனர் என்கிற மிக பெரிய ,மிகமிக உயரிய வேலையிலிருந்து இயக்குனராக என் முதல் படியை ஏற ஆரம்பித்து இருக்கிறேன்.. மேலும் நான் வளர உங்கள் ஊக்கமும் விமர்ச்சனமும் தேவை.. அன்புடன் வீரமணி

நானும் ரைட்டர் நிலம் சாரும்
'Thirappu Vizha' to be completed in single schedule PGV [ Fri, Sep 14, 2012 ] Comments Thirappu Vizha: 'Thirappu Vizha' is the maiden directorial venture of K.G. Veeramani, who has assisted Director Hari in the making of films like 'Seval', 'Singam', and 'Vengai'. Veeramani has introduced a new face, Jaya Anand, as the hero in 'Thirappu Vizha'. Pairing up with him is Manishajith, who played the female lead in 'Nanbargal Gavanathirkku'. She started her career as a child artiste. G.M. Kumar plays a key role. The film has also Manobala and 'Pasanga' Sivakumar in the cast. M. Zerina Begam is producing the film on behalf of Infor Films. The film revolves around a youth who lost his sleep to wake up a village of downtrodden people and develop it with the help of his lover. Vasanthan Ramesh is the music director. The story and dialogues are by Rabi and the screenplay is by director Veeramani. According to unit sources, Veeramani is endeavoring to complete the film in a single schedule. He plans to start the shooting in Vriddhachalam and continue in Neyveli and Veeranam.

Thursday, December 15, 2011

உலக சினிமா :நாள் 2

THE TRAVELLER (2009/ எகிப்து/ 125 நி)
இயக்குனர்: Ahmed Maher

Hassan-னின் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் மூன்று நாட்களின் நிகழ்வுதான் மையம். 1948-ல் ஒருநாள்... எகிப்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பிரதிபலிக்கிறது; 1973-ல் ஒருநாள்... அக்டோபர் 6 போரை காட்டுகிறது; 2001-ல் ஒருநாள்... 9/11 சம்பவத்தைச் சொல்கிறது. இந்த மூன்று நாட்களும் ஹுசைனின் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடந்த தினங்கள். தேடல், கடமை, காதல், அன்பு துயரம் என பல உணர்வுகளை வெளிப்படுத்த வைத்தவை அவை.

*

3.00 PM

GOOD MEN,, GOOD WOMEN (1995 / தைவான்/108 நி)
இயக்குனர் : Hsiao-hsien Hou

Chiang Bi-Yu-ன் உண்மைக் கதை. 1940-களில் தனது கணவருடன் சீனா சென்று ஜப்பானிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்கிறாள். போர்க் காலத்தில் தனது குழந்தையை தத்துக் கொடுக்க வேண்டியச் சூழல். போர், அரசியல் மாற்றங்கள் அவளது வாழ்க்கையின் போக்கை எப்படி நிர்ணயிக்கிறது என்பதே படம். தைவானின் வரலாறு, தேசிய அடையாளம் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை அலசுகிறது இப்படம்.


*

5.30 PM

AMNESTY (அல்பேனியா/ 2011/ 83 நி)
இயக்குனர் : Bujar Alimani

அல்பேனியாவின் புதிய சட்டம், சிறையில் தம்பதிகளை மாதம் ஒருமுறை தாம்பத்யம் வைத்துக்கொள்ள அனுமதிக்கிறது. சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. சிக்கல் தொடங்குகிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது!


*

8.00 PM

NO RETURN (2010/ அர்ஜெண்டினா/ 106 நி)
இயக்குனர்: MIGUEL COHAN

ஒரு சிறுவன் மீது கார் மோதிச் செல்கிறது. சிறுவன் சம்பவ இடத்தில் இறக்கிறான். டிரைவரோ தப்பிச் சென்றுவிடுகிறான். அச்சிறுவனின் தந்தை, மீடியாவின் உதவியுடன் தனது மகனுக்கு நீதி கிடைக்கப் போராடுகிறார். அதேவேளையில், ஒரு அப்பாவி குற்றவாளியாக்கப்படுகிறான். சமூக நிலையையும், நீதித்துறையையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் படம்.

*

உட்லண்ட்ஸ் சிம்பொனி

12.45 PM

KING OF DEVILS ISLAND (2010/ நார்வே/ 120 நி)
இயக்குனர்: Marius Holst

Bastoy சிறையில் நடந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 20-ம் நூற்றாண்டின் தொடக்கம். பாஸ்டோயிலுள்ள காப்பகத்துக்கு வரும் புதிய இளைஞன், கொடூர ஆட்சிக்கு எதிராக அனைவரையும் பொங்கி எழ வைக்கிறான். பிறகு என்ன நிகழ்கிறதே என்பதே திரைக்கதை.

*

3.15 PM

RED SKY (2011/ கிரீஸ்/ 105 நி)
இயக்குனர்: Laya Yourgou

Aris, Stelios இருவரும் நண்பர்கள். தெற்கு கிரீஸுக்குச் சென்று தொழிலில் பெரிய ஆளாக வேண்டும் என்பது அவர்கள் கனவு. அதை நிறைவேற்றப் புறப்படுகிறார்கள். அது, வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வலம் வரும் கலர்ஃபுல்லான இடம். பெண்களை நாடுவது இல்லை என்பது இருவரின் சபதம். ஆனால், அடுத்தடுத்த அனுபவங்கள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

*

5.45 PM

HEAT WAVE (2011/ பிரான்ஸ்/ 92 நி)
இயக்குனர் : Jean-Jacques Jauffret

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன டிராமா வகையறா சினிமா. வளரிளம் பவருத்தில் Stphane and Luigi என்ற இரு கசின் சகோதரர்கள், ஓய்வு பெற்றவரான Georges, Luigi-ன் காதலி Amelie, அவளது அம்மா Anne. காயங்கள், வலிகள், அச்சங்கள், கவலைகள் என துயரங்களால் நிரம்பிய இவர்களது வாழ்க்கையைச் சொல்லும் படம்.

*

8.00 PM

KISS ME AGAIN (2010/ இத்தாலி/ 139 நி)
இயக்குனர் : Gabriele Muccino

Carlo, Giulia மற்றும் அவர்களது நண்பர்கள்... 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் எப்படி இருக்கிறது? வெவ்வேறு கதாப்பாத்திரங்களை நுட்பமாக கையாண்டிருப்பது படத்தின் பலம் என விமர்சனங்கள் கூறுகின்றன.

****

ஃபிலிம் சேம்பர்

12.30 PM

வெங்காயம் (2011/தமிழ்/126 நி)
இயக்குனர் : சங்ககிரி ராஜ்குமார்

சாமியார்கள், ஜோசியம், பரிகாரம் இவை எல்லாம் உரித்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை என்று சொல்வதுதான்... 'வெங்காயம்!’
ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம்.
விகடன் விமர்சனம் : வெங்காயம்
*

3.30 PM

அவன் இவன் (2010/ தமிழ்/ 127 நி)
இயக்குனர் : பாலா

ஆர்யா... கும்பிடுறேன் சாமி. விஷால்... வால்டர் வணங்காமுடி. இருவருக்கும் அப்பா ஒருவர், அம்மாக்கள் வேறு வேறு. களவாணிப் பயல்களின் ரகளைகளே படம்!

விகடன் விமர்சனம் : அவன் இவன்

*

6.30 PM

THE MOUNTAIN (2011/ நார்வே/ 73 நி)
இயக்குனர் : Ole Gieaver

இரண்டு பெண்களின் பயணமும், அதைத் தொடர்ந்த உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளுமே படம். முக்கிய கதாப்பாத்திரங்கள் தரும் அனுபவம் வியப்புக்குரியவை. அன்பின் மகத்துவத்தையும் போற்றும் படம். உத்வேகம் என்பதற்கு புதிய அர்த்தம் காண முடியும்.

*

THE DAYS OF DESIRE / (2010/ ஹங்கேரி/ 104 நி)
இயக்குனர் : Jozsef Pacskovszky

கருத்து வேறுபாடுள்ள பணக்கார தம்பதி. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் Anna. இம்மூவருக்கும் இடையிலான உறவு, சிக்கல்களை விறுவிறுப்பாக சொல்லும் படம்.

ஐநாக்ஸ்

12.15 pm
MY LITTLE PRINCESS
இயக்குனர் : Eva Lonesco


ஈராக் யுத்தத்தில் பங்கேற்று, ஆசையோடு வீடு திரும்பும் ஆரோனை துன்பம் வரவேற்கிறது. அவன் மனைவி சாரா மரணப்படுக்கையில் இருக்க, அவர்களது மகள் ஐரின் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். ஆரோன் ஐரினின் கடைசி நாட்களை சந்தோஷமானதாக மாற்ற மேற்கொள்ளும் போராட்டங்களைச் சொல்லும் படம் இது. அன்பு, கருணை, பாசத்தின் மேன்மையை மென்மையாக உணர்த்தி பார்வையாளர்களின் மனங்களில் இடம்பிடித்த படம் இது.

இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்தது.

*

2.30 pm
RESTLESS
இயக்குனர் : Gus Van Sant

மரணம் நடந்த வீடுகளுக்குப் போவதை வாடிக்கையாகக் கொண்ட ஒருவன், அவனுக்கு நண்பனாக இருக்கும் ஆவி ( இரண்டாம் உலகப் போரில் இறந்த ஜப்பானிய விமானி ), நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பெண் இந்த மூவருக்கும் இடையிலான சம்பவங்களைச் சொல்லும் சுவாரஸ்யமான படம் இது.
17 GIRLS
இயக்குனர் :Delphine Coulin, Muriel Coulin


பள்ளிச் சிறுமிகள் 17 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பிணிகளாக திட்டமிடுகிறார்கள். அவர்களது மனநிலை, சூழல் ஆகிவற்றைச் சொல்லும் படம் இது. அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது