Monday, November 03, 2008

நாம் எல்லாம் மனிதர்களா

அரசியலாக்கி

கொன்டிருப்பதை

வேடிக்கை பார்த்துகொண்டு

இருக்கிறோமே

நாமெல்லாம்

நல்லவன்களா?

கெட்டவன்களா?























முதலாம் ஆண்டு வீரவணக்கம்



தமிழீழத் தேசியத் தலைவர் விரும்புகின்ற வகையில் செயலாற்றி மக்கள் நேயப் போராளியாக விளங்கியதுடன், அனைவரினதும் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவராகத் திகழ்ந்தவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் நீண்ட வரலாற்றுப் பயணத்தில் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய போராட்டப் பணி அளப்பரியது.

சாவையும் அழிவையும் தமிழ் மக்கள் மீது சுமத்தி அவர்களின் விடுதலை நோக்கிய திசை வழிப் பயணத்தை மாற்றிவிட சிங்கள அரசுகள் முயற்சித்த வேளைகளில் அதற்கு எதிராக உறுதியுடன் போராடியதுடன் மக்களுக்கான அரசியல் பணியை நீண்டகாலம் பொறுப்புடன் ஆற்றிய ஒரு போராளியாக பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தனது இளம் வயதில் போராட்டத்தில் இணைந்து துடிப்பான செயல்திறனை வெளிப்படுத்தி தேசியத் தலைவரினதும் போராளிகளினதும் மக்களினதும் அன்பிற்கும் மதிப்புக்கும் பாத்திரமானவராக தனது செயற்காலத்தில் விளங்கினார்.

விடுதலை இயக்கமும் , மக்களும் சிங்களதேசத்தின் அநீதிக்கு எதிராக கடந்த30 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வில்லாது நடத்தி வரும் விடுதலைப் போராட்டப் பயணத்தில் அவ்வப்போது பெரும் நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்த போதெல்லாம் மக்களை ஒன்றுதிரட்டி அவர்களின் பலத்தை ஒருமுகப்படுத்தி விடுதலை இயக்கத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் முன்னின்று உழைத்தவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்