முசுடு கட்டிய கூடு மாதிரி
உன் ஈர மனசால் பின்னப்பட்டது
என் வாழ்வு
உன் தாகத்தின் பிசினால்
குழைக்கப்பட்டது அதன் வலு
அதில் வாழும்
என் ஒவ்வொரு நிமிட வாழ்வும்
உன் ரத்ததின் வியர்வையால் கிடைத்தது..
எந்த அபிமானமென்று தெரியாமலே
என்னாலான அத்தனை சுமைகளையும்
நீ சந்தோஷமாகவே சுமந்துகொண்டிருக்கிறாய்
வயல்க்காட்டு புழுதியில்
மண்புழு நுழைவது மாதிரி
உன் உயிருக்குள்
நுழைந்துகொண்டே இருக்கிறேன்..
என்றேனும் ஒரு நாள்
என் நுழைதலின் வலி தாங்காமல்போனால்
என்ன செய்வாய் என்று கேட்கையில்
உன்னை விழுங்கி விட்டு
கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்வேன்
என்று சொல்லி
மவ்னமாக சிரிக்கிறாய்..........
Saturday, September 30, 2006
சந்தோஷம்

அடுக்கி வைத்திருக்கும்
குறுந்தகடுகளில்
சுருங்கியிருக்கிறது
என் தினசரி.
கடிதம்
சந்திப்புக்கள் என்பதை
சுத்தமாக மறக்க செய்துவிட்டது
கைபேசி.
தினமும் அமெரிக்கா, லண்டண் ...
என எல்லா வெளிநாடுகளுக்கும்
அழைத்து சென்று
அனுப்பி வைக்கிறது
இன்டர்நெட்.
என்றாலும்
நெருப்புட்டியில் நூல் கோர்த்து
நீயும் நானும்
பேசிக்கொண்ட
உரையாடலின் சந்தோஷத்தை
எதிலும் பெறமுடியவில்லை
என்னால்.
குறுந்தகடுகளில்
சுருங்கியிருக்கிறது
என் தினசரி.
கடிதம்
சந்திப்புக்கள் என்பதை
சுத்தமாக மறக்க செய்துவிட்டது
கைபேசி.
தினமும் அமெரிக்கா, லண்டண் ...
என எல்லா வெளிநாடுகளுக்கும்
அழைத்து சென்று
அனுப்பி வைக்கிறது
இன்டர்நெட்.
என்றாலும்
நெருப்புட்டியில் நூல் கோர்த்து
நீயும் நானும்
பேசிக்கொண்ட
உரையாடலின் சந்தோஷத்தை
எதிலும் பெறமுடியவில்லை
என்னால்.
Tuesday, September 26, 2006
Saturday, September 16, 2006
அதிசயம்
விரைவில் எதிர்பாருங்கள் தமிழ் வலைப்பதிவில் ஓர் அதிசயம்ம்ம்ம்ம்ம்
வழுங்குபவர் வேற யாரு நம்ம பாலபாரதிதான்......
வழுங்குபவர் வேற யாரு நம்ம பாலபாரதிதான்......
Subscribe to:
Posts (Atom)