சாமுண்டி" ரத்தமும் சதையுமான வாழ்க்கை சு.தமிழ்ச்செல்வி அவர்களின் முதல் சிறுகதை நூல் சாமுண்டி.
மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுக்காட்டுத்துறை ,என இதற்குமுன்பு ஐந்து நாவல்களில் நம்மை வாழவைத்துவிட்டு சிறுகதை மூலம் நம்மிடம் உரையாடுகிறார்..
தொகுப்பில் உள்ள 8 கதைகளும் 8தலைமுறை வாழ்வு. என்னால் ஒரு கதையைப்படித்துவிட்டு அடுத்த கதையை படிக்க முடியவில்லை, மனதை ஏதேதோ செய்துவிடுகிறது பாத்திரங்களின் வாழ்க்கை.
தொகுப்பில் என்னை மிகவும் பாதித்தது கொடும்பாவி"யும் கன்னியாயி"யும்தான்.. கொடும்பாவியின் அம்மனி மன உளச்சல்,வேலை கிடைக்கவேண்டுமே என்கிற பரிதவிப்பு, கிடைக்காத போது பொங்கிபெருகும் கண்ணீரில் பொங்கியது என் கண்களிலும் கண்ணீர்..இந்த கதையை விடியற்காலை 5 மணியளவில் படித்துகொண்டு இருந்தபோது என்னையற்யாமல் அழுதுகொண்டிருந்தேன்...மழைபெய்ய ஆரம்பித்ததும் அம்மனியை போல நமக்கும் ஒரு நிம்மதிகிடைத்தாலும், கணத்துப்போன மனசில் இருந்து விடை பெறுவதற்கு வெகுநாட்களாகும்.
கன்னியாயியும் அப்படித்தான் புலிகள் காணாமல்போனதையும் நரிகள் நடமாட்டதையும், உதவும் போது கடவுளாவதையும் பற்றி பேசும் கதை. புலி பதுங்குவது பயந்து அல்ல பாய்வதற்கென என சொல்லும் லாவகமும் அழகோ அழகு மொத்தத்தில் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் நடையும் மொழி நேர்த்தியும், வெகு இயல்பான வழக்குகளும், வாசகனை மேலும்மேலும் ரசிகனாக்கி விடுகிறது..நாவல்கள் ஏற்படுத்திய அதேபாதிப்புகளை சிறுகதைகளும் ஏற்படுத்துகிறது சு.தமிழ்ச்செல்வி அவர்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக என்னால் பார்க்கமுடிகிறது..மேலும் ஆசிரியர் கலைஞர் அவர்களின் கரங்களால் பொற்கிழி பெற்றதற்கு வாழ்த்துகளை சொல்லிகொண்டு மேலும் மேலும் படைப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாசகனாக இருக்கிறேன் என சொல்லி அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன்.....
அன்புடன்
வீரமணி
Saturday, January 19, 2008
Friday, January 18, 2008
பொங்கலோ பொங்கல்
Saturday, January 12, 2008
"வனப்பேச்சி" ஞாபகப்படுத்திய என் கிராமத்து நாட்கள்



என் கால்சட்டை காலத்திற்கு அழைத்துசென்று அழகு பார்த்தது புத்தகம். வனப்பேச்சி படித்துமுடித்ததும்
நான் மறுபடியும் என் கீணனூர் முழக்க ஊர்சுற்றிவிட்டு ,
ம்ணிமுத்தாற்றில் ஓரி அடித்துவிட்டு ,
கலுங்கு குட்டையில் மீன்பிடிதுவிட்டு,
ஏரிவயற்காட்டில் நண்டுபிடித்துவிட்டு,
தய்யானோடையில் கொரக்காத்தட்டை ஒடித்து பீப்பீ செய்து ஊதிவிட்டு, மணக்காட்டில் மாட்டுக்கு பில் அறுத்துவிட்டு,
ஆடுமாடுகளை பெரிய வாய்க்காமேட்டிற்கு ஓட்டிசென்று மேய்த்துவிட்டு, இரவுவீடு திரும்பி வாசலில் நிலா வெளிச்சத்தில் ராச்சோறு தின்றுவிட்டு, வீதி விளக்கொளியில் "காயேகடுப்பங்காய்"--"உப்பாள் சரணா"--" கபடி" விளையாடிவிட்டு,
மறுபடியும் கொஞ்சம் சோறுசாப்பிட்டுவிட்டு ,
சின்னாச்சி சொல்லும் ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அவருக்கு ஏழு பொண்டாட்டியாம், ஏழுப்பேருக்குமே குழந்தை இல்லையாம்........
என்று நீளும் கதையை "ம்" கொட்டி கதைகேட்டபடி தூங்கிப்போகும் அந்த பிஞ்சு நாட்களையெல்லாம் அசைபோட்டப்படி புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராமல் கிடக்க செய்தது.
புரியாத வார்த்தைகளையிட்டு நிரப்பிவிட்டு கவிதை செய்யும் பல பெண்ணிய கவிதைகளிலிருந்து விலகி, புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளால், புழக்கத்தில் இருக்கும் வாழ்க்கைகளை, அழகழகான நிகழ்வுகளை காட்சியாக்கியிருக்கும் படிமங்கள்,சுண்டகாய்ச்சிய வார்த்தைகள், நகரத்திலிருந்துகொண்டு கிராமங்களை நினைத்து ஏங்கும் இயலாமையும்,பிள்ளைகளை ஊருக்கு அழைத்துசெல்லுபோதே திரும்பி எப்ப வருவோம் என்றகேள்வியை எதிர்க்கொள்ளும் மனசு எந்த மாதிரி மனநிலைக்கு அழைத்து செல்லும் என்றகேள்விக்கு பதிலாக இருக்கும் கவிதைகளையெல்லாம் எப்படி பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற நேரத்தில் "வனப்பேச்சி" ஒரு நல்ல நண்பனாக,ஒரு நல்லதோழியாக மனசை பகிர்ந்துகொள்கிறது. மடி சாய்ந்து கண்ணயிரும் தாய்மையும், தோள்சாய்ந்து மனசாறும் துணையாகவும் வனப்பேச்சியை பத்திரபடுத்திக்கொள்கிறேன் ரயிலடி அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது ஒற்றை அறையில்....
வீரமணி
சென்னை-17
13-01-08
Saturday, January 05, 2008
"க்"கை தூக்கச்சொன்னது தமிழ்
"க்"கை தூக்க சொன்னது தமிழ்
'அரவிந்தன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை இசைமைப்பாளராக அறிமுகப்படுத்தியது அம்மா கிரியேஷன்ஸ் சிவா. அந்த படம் வெளிவந்த ஆண்டு 1997. அதன்பிறகு பட தயாரிப்பை நிறுத்திக்கொண்ட நிறுவனம் பத்துவருடங்களுக்கு பிறகு 'வாழ்த்துகள்' படத்தை தயாரித்துள்ளது. சீமான் இயக்கும் இப்படத்திற்கும் யுவன்தான் இசை.


நேற்று நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இதனை தெரிவித்த தயாரிப்பாளர் சிவா, தனக்கு உதவிக்கரம் நீட்டிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கெண்டார்.
சத்யராஜ், பிரபு, பார்த்திபன், இராம.நாராயணன் கலந்து கொண்ட பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்திக் சிதம்பரம் பாடல்களை வெளியிட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போல பார்த்திபனின் பேச்சில் சுவாரஸ்ய தோரணம்.
"ஒரு படத்திற்காக எனக்கு விக் செய்து கொடுத்தவர் 'விக் நல்லாயிருக்குதா சார்' என்று கேட்டார். நான் அவரிடம் மயிர் மாதரி இருக்கு என்று சொன்னதும் நான் கெட்ட வார்த்தை பேசுவதாக நினைத்து கோபப்பட்டார்.
விக் என்பது சிந்தடிக்கால் செய்யபடுவதாகும். ஆனால் நீங்கள் செய்து கொடுத்த விக் நிஜமான தலைமுடியை போல த்தரூபமாக இருக்கு. தலைமுடியை மயிர் என்றுதான் சொல்வார்கள். அதான் அப்படி குறிப்பிட்டேன் என்றதும் சமாதானமானார்.
அதேபோல் விக் வைப்பதற்கு பொருத்தமான நடிகர் சத்யராஜ் சார்தான். அவர் வைத்த விக்குகளிலேயே சிறந்தது பெரியார் வேடத்திற்காக வைத்ததுதான். அது விக் இல்லை அவருக்கு சூட்டப்பட்ட கிரீடம். எல்லோரையும் பெற்றெடுப்பது தாய்தான். ஆனால் சீமான் மட்டும் தமிழ்தாய் பெற்றெடுத்த மகன்" என்று பேச்சை முடிக்க அரங்கத்தின் கரவொலி காதை துளைத்தது.
இறுதியாக நன்றியுரையாற்றிய சீமான், இடைவிடாமல் இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். உலகின் மிக நீண்ட நன்றியுரை என்றுகூட சொல்லலாம்.
"பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பிரபு அண்ணன் எனக்கு உதவியிருக்காவிட்டால் இயக்குனராக ஆகியிருக்கமாட்டேன். எனவே அவருக்கு நன்றிகள். தன்னைப்போல பிறரையும் நேசி; பெற்றவர்களை காப்பாற்றாதவன் மற்றவர்களை காப்பாற்ற முடியாது என்ற சிந்தனைகளை விதைக்கும் கதைதான் வாழ்த்துகள்.
ஆரம்பத்தில் 'வாழ்த்துக்கள்' என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. முதல்வரை சந்தித்தபோது வாழ்த்துக்களில் 'க்' இருந்தால் கிக்காக இருக்கும் 'வாழ்த்து+கள்' ஆகிவிடும் எனவே 'க்' கை எடுத்துவிடு என்றார். தமிழே சொல்லிவிட்டபோது திருத்தாமல் இருக்கமுடியாதே எனவே 'வாழ்த்துகள்' என்று மாற்றினோம்" என்றார்.
`வாழ்த்துக்கள்' - அண்ணன்சீமான்


இயக்குனரா இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நடிப்பில் இறங்கிவிட்டீர்களே... 'பள்ளிகூடம்', 'எவனோ ஒருவன்' இப்படி?அது நண்பர்களுக்காக பண்ணியது. அந்தப் படங்கள் நல்ல படங்கள். பேசக்கூடிய படமா இருந்ததால நடிச்சேன். நல்ல படத்துல எந்த மாதிரியான விதத்திலாவது பங்கெடுப்பது மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயம்.மாதவனை அடுத்த படத்திலும் நாயகனா ஆக்கியிருப்பது பற்றி...?எனக்கும் மாதவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. எப்படியாவது தன் படம் ஓடினால் போதும்னு நினைக்கிற சுயநல நடிகரல்ல அவர். நல்ல படத்துல நடிக்கணும்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்.அது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தவித நடிப்பும் இல்லாம சகோதரர் போல பழகுறவிதம் இது எனக்குப் பிடிச்சு எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கு. அதனால தொடர்ந்து எங்கள் கூட்டணி தொடருது.
இயக்குனரா இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நடிப்பில் இறங்கிவிட்டீர்களே... 'பள்ளிகூடம்', 'எவனோ ஒருவன்' இப்படி?அது நண்பர்களுக்காக பண்ணியது. அந்தப் படங்கள் நல்ல படங்கள். பேசக்கூடிய படமா இருந்ததால நடிச்சேன். நல்ல படத்துல எந்த மாதிரியான விதத்திலாவது பங்கெடுப்பது மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயம்.மாதவனை அடுத்த படத்திலும் நாயகனா ஆக்கியிருப்பது பற்றி...?எனக்கும் மாதவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. எப்படியாவது தன் படம் ஓடினால் போதும்னு நினைக்கிற சுயநல நடிகரல்ல அவர். நல்ல படத்துல நடிக்கணும்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்.அது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தவித நடிப்பும் இல்லாம சகோதரர் போல பழகுறவிதம் இது எனக்குப் பிடிச்சு எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கு. அதனால தொடர்ந்து எங்கள் கூட்டணி தொடருது.
Subscribe to:
Posts (Atom)