சாமுண்டி" ரத்தமும் சதையுமான வாழ்க்கை சு.தமிழ்ச்செல்வி அவர்களின் முதல் சிறுகதை நூல் சாமுண்டி.
மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுக்காட்டுத்துறை ,என இதற்குமுன்பு ஐந்து நாவல்களில் நம்மை வாழவைத்துவிட்டு சிறுகதை மூலம் நம்மிடம் உரையாடுகிறார்..
தொகுப்பில் உள்ள 8 கதைகளும் 8தலைமுறை வாழ்வு. என்னால் ஒரு கதையைப்படித்துவிட்டு அடுத்த கதையை படிக்க முடியவில்லை, மனதை ஏதேதோ செய்துவிடுகிறது பாத்திரங்களின் வாழ்க்கை.
தொகுப்பில் என்னை மிகவும் பாதித்தது கொடும்பாவி"யும் கன்னியாயி"யும்தான்.. கொடும்பாவியின் அம்மனி மன உளச்சல்,வேலை கிடைக்கவேண்டுமே என்கிற பரிதவிப்பு, கிடைக்காத போது பொங்கிபெருகும் கண்ணீரில் பொங்கியது என் கண்களிலும் கண்ணீர்..இந்த கதையை விடியற்காலை 5 மணியளவில் படித்துகொண்டு இருந்தபோது என்னையற்யாமல் அழுதுகொண்டிருந்தேன்...மழைபெய்ய ஆரம்பித்ததும் அம்மனியை போல நமக்கும் ஒரு நிம்மதிகிடைத்தாலும், கணத்துப்போன மனசில் இருந்து விடை பெறுவதற்கு வெகுநாட்களாகும்.
கன்னியாயியும் அப்படித்தான் புலிகள் காணாமல்போனதையும் நரிகள் நடமாட்டதையும், உதவும் போது கடவுளாவதையும் பற்றி பேசும் கதை. புலி பதுங்குவது பயந்து அல்ல பாய்வதற்கென என சொல்லும் லாவகமும் அழகோ அழகு மொத்தத்தில் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் நடையும் மொழி நேர்த்தியும், வெகு இயல்பான வழக்குகளும், வாசகனை மேலும்மேலும் ரசிகனாக்கி விடுகிறது..நாவல்கள் ஏற்படுத்திய அதேபாதிப்புகளை சிறுகதைகளும் ஏற்படுத்துகிறது சு.தமிழ்ச்செல்வி அவர்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக என்னால் பார்க்கமுடிகிறது..மேலும் ஆசிரியர் கலைஞர் அவர்களின் கரங்களால் பொற்கிழி பெற்றதற்கு வாழ்த்துகளை சொல்லிகொண்டு மேலும் மேலும் படைப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாசகனாக இருக்கிறேன் என சொல்லி அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன்.....
அன்புடன்
வீரமணி
Saturday, January 19, 2008
Friday, January 18, 2008
பொங்கலோ பொங்கல்
Saturday, January 12, 2008
"வனப்பேச்சி" ஞாபகப்படுத்திய என் கிராமத்து நாட்கள்


என் கால்சட்டை காலத்திற்கு அழைத்துசென்று அழகு பார்த்தது புத்தகம். வனப்பேச்சி படித்துமுடித்ததும்
நான் மறுபடியும் என் கீணனூர் முழக்க ஊர்சுற்றிவிட்டு ,
ம்ணிமுத்தாற்றில் ஓரி அடித்துவிட்டு ,
கலுங்கு குட்டையில் மீன்பிடிதுவிட்டு,
ஏரிவயற்காட்டில் நண்டுபிடித்துவிட்டு,
தய்யானோடையில் கொரக்காத்தட்டை ஒடித்து பீப்பீ செய்து ஊதிவிட்டு, மணக்காட்டில் மாட்டுக்கு பில் அறுத்துவிட்டு,
ஆடுமாடுகளை பெரிய வாய்க்காமேட்டிற்கு ஓட்டிசென்று மேய்த்துவிட்டு, இரவுவீடு திரும்பி வாசலில் நிலா வெளிச்சத்தில் ராச்சோறு தின்றுவிட்டு, வீதி விளக்கொளியில் "காயேகடுப்பங்காய்"--"உப்பாள் சரணா"--" கபடி" விளையாடிவிட்டு,
மறுபடியும் கொஞ்சம் சோறுசாப்பிட்டுவிட்டு ,
சின்னாச்சி சொல்லும் ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அவருக்கு ஏழு பொண்டாட்டியாம், ஏழுப்பேருக்குமே குழந்தை இல்லையாம்........
என்று நீளும் கதையை "ம்" கொட்டி கதைகேட்டபடி தூங்கிப்போகும் அந்த பிஞ்சு நாட்களையெல்லாம் அசைபோட்டப்படி புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வராமல் கிடக்க செய்தது.
புரியாத வார்த்தைகளையிட்டு நிரப்பிவிட்டு கவிதை செய்யும் பல பெண்ணிய கவிதைகளிலிருந்து விலகி, புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளால், புழக்கத்தில் இருக்கும் வாழ்க்கைகளை, அழகழகான நிகழ்வுகளை காட்சியாக்கியிருக்கும் படிமங்கள்,சுண்டகாய்ச்சிய வார்த்தைகள், நகரத்திலிருந்துகொண்டு கிராமங்களை நினைத்து ஏங்கும் இயலாமையும்,பிள்ளைகளை ஊருக்கு அழைத்துசெல்லுபோதே திரும்பி எப்ப வருவோம் என்றகேள்வியை எதிர்க்கொள்ளும் மனசு எந்த மாதிரி மனநிலைக்கு அழைத்து செல்லும் என்றகேள்விக்கு பதிலாக இருக்கும் கவிதைகளையெல்லாம் எப்படி பகிர்ந்துகொள்ளமுடியும் என்ற நேரத்தில் "வனப்பேச்சி" ஒரு நல்ல நண்பனாக,ஒரு நல்லதோழியாக மனசை பகிர்ந்துகொள்கிறது. மடி சாய்ந்து கண்ணயிரும் தாய்மையும், தோள்சாய்ந்து மனசாறும் துணையாகவும் வனப்பேச்சியை பத்திரபடுத்திக்கொள்கிறேன் ரயிலடி அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது ஒற்றை அறையில்....
வீரமணி
சென்னை-17
13-01-08
Saturday, January 05, 2008
"க்"கை தூக்கச்சொன்னது தமிழ்
"க்"கை தூக்க சொன்னது தமிழ்
'அரவிந்தன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை இசைமைப்பாளராக அறிமுகப்படுத்தியது அம்மா கிரியேஷன்ஸ் சிவா. அந்த படம் வெளிவந்த ஆண்டு 1997. அதன்பிறகு பட தயாரிப்பை நிறுத்திக்கொண்ட நிறுவனம் பத்துவருடங்களுக்கு பிறகு 'வாழ்த்துகள்' படத்தை தயாரித்துள்ளது. சீமான் இயக்கும் இப்படத்திற்கும் யுவன்தான் இசை.


நேற்று நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இதனை தெரிவித்த தயாரிப்பாளர் சிவா, தனக்கு உதவிக்கரம் நீட்டிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கெண்டார்.
சத்யராஜ், பிரபு, பார்த்திபன், இராம.நாராயணன் கலந்து கொண்ட பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்திக் சிதம்பரம் பாடல்களை வெளியிட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போல பார்த்திபனின் பேச்சில் சுவாரஸ்ய தோரணம்.
"ஒரு படத்திற்காக எனக்கு விக் செய்து கொடுத்தவர் 'விக் நல்லாயிருக்குதா சார்' என்று கேட்டார். நான் அவரிடம் மயிர் மாதரி இருக்கு என்று சொன்னதும் நான் கெட்ட வார்த்தை பேசுவதாக நினைத்து கோபப்பட்டார்.
விக் என்பது சிந்தடிக்கால் செய்யபடுவதாகும். ஆனால் நீங்கள் செய்து கொடுத்த விக் நிஜமான தலைமுடியை போல த்தரூபமாக இருக்கு. தலைமுடியை மயிர் என்றுதான் சொல்வார்கள். அதான் அப்படி குறிப்பிட்டேன் என்றதும் சமாதானமானார்.
அதேபோல் விக் வைப்பதற்கு பொருத்தமான நடிகர் சத்யராஜ் சார்தான். அவர் வைத்த விக்குகளிலேயே சிறந்தது பெரியார் வேடத்திற்காக வைத்ததுதான். அது விக் இல்லை அவருக்கு சூட்டப்பட்ட கிரீடம். எல்லோரையும் பெற்றெடுப்பது தாய்தான். ஆனால் சீமான் மட்டும் தமிழ்தாய் பெற்றெடுத்த மகன்" என்று பேச்சை முடிக்க அரங்கத்தின் கரவொலி காதை துளைத்தது.
இறுதியாக நன்றியுரையாற்றிய சீமான், இடைவிடாமல் இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். உலகின் மிக நீண்ட நன்றியுரை என்றுகூட சொல்லலாம்.
"பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பிரபு அண்ணன் எனக்கு உதவியிருக்காவிட்டால் இயக்குனராக ஆகியிருக்கமாட்டேன். எனவே அவருக்கு நன்றிகள். தன்னைப்போல பிறரையும் நேசி; பெற்றவர்களை காப்பாற்றாதவன் மற்றவர்களை காப்பாற்ற முடியாது என்ற சிந்தனைகளை விதைக்கும் கதைதான் வாழ்த்துகள்.
ஆரம்பத்தில் 'வாழ்த்துக்கள்' என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. முதல்வரை சந்தித்தபோது வாழ்த்துக்களில் 'க்' இருந்தால் கிக்காக இருக்கும் 'வாழ்த்து+கள்' ஆகிவிடும் எனவே 'க்' கை எடுத்துவிடு என்றார். தமிழே சொல்லிவிட்டபோது திருத்தாமல் இருக்கமுடியாதே எனவே 'வாழ்த்துகள்' என்று மாற்றினோம்" என்றார்.
`வாழ்த்துக்கள்' - அண்ணன்சீமான்

சினிமாவில் வியாபார அணுகுமுறையுடன் கொஞ்சமாவது சமூக அக்கறையும் வேண்டும் என்று கவலைப்படும் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் சீமான். 'தம்பி' வெற்றிப் படத்துக்குப் பின் இப்போது 'வாழ்த்துக்கள்' வழங்க தயாராகிவிட்டார்.இனி சீமான்...!'தம்பி'க்கும் 'வாழ்த்துக்கள்' படத்துக்கும் என்ன வேறுபாடு...?சுருக்கமாகச் சொல்லணும்னா `தம்பி' கோபக்கார பயல். `வாழ்த்துக்கள்'ல வர்ற கதிரவன் பாசக்காரப் பயல். தம்பியில் எந்த அம்மாவ அடிச்சாலும் நான் அடிப்பேன்னு கொதிக்கிறவனைப் பார்த்திருப்பீங்க.இந்த கதிரவன் ரொம்ப அன்பானவன். உங்க பக்கத்துல தோள் மேல கை போட்டுப் பேசுறவன். தோழமையோடு கைகொடுக்கிறவன்.கதையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?இன்னைக்கு நாகரிகம்கிற பேர்ல நகரத்துல ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்காம அன்பு காட்டாம தனித்தனி தீவா பிரிஞ்சு கிடக்குற அவலத்தைச் சொல்றேன். பக்கத்து வீட்டுல கொலை நடந்தாலும் தெரியலை. கொள்ளை நடந்தாலும் தெரியலை. இன்னைக்கு அடுக்கு மாடி குடியிருப்புல எத்தனை பேருக்கு பக்கத்து வீட்டுக்காரன் பெயர் தெரியும்.என்னடா வாழ்க்கை இது... இப்படிப்பட்டதுதான் வாழ்க்கைன்னு எதிர்காலத்துக்கு கத்துக் கொடுத்துட்டு இருப்பது கொடுமை. கிராமத்துல இந்தக் கேவலம் இல்லை. வீடு தூரம் தூரமா பிரிஞ்சு கிடந்தாலும் ஒருத்தருக்கு ஒண்ணுன்னா ஓடி உதவுறாங்க. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு உலகமே தன் ஊரா பரந்த மனத்தோட பாடியவன் தமிழன். யாவரும் கேளிர்னு எல்லா மக்களையும் தன்சொந்தங்களா பார்த்தவன் தமிழன். ஆனா இன்னைக்குஇந்தக் கோபத்தை தான் படத்தில் வெளிப்படுத்துகிறீர்களா?கோபம்னு சொல்றதை விட இயல்பானதைச் சொல்றேன். கோடிக் கோடியா பணம், பெரிய வீடு, இயந்திரம் மாதிரி உழைப்பு, ஓய்வில்லாம ஓட்டம், அவசரம் அவசரம்னு பறக்கிறோம். இவ்வளவு ஓடி திரும்பிப் பார்த்தால்... என்ன மாதிரி வாழ்ந்திருக்கோம்னா வெறுமையா இருக்கு. இது ஒரு வாழ்க்கையான்னு தோணுது.இப்படித்தான் வாழணும்னு சொன்னவன் யாரு? அன்பு, பாசம், மனசாட்சி எல்லாத்தையும் காவு கொடுத்துட்டு மனிதநேயமே இல்லாம மனிதனை மதிக்காத வாழ்க்கை வாழ்வதில் என்ன அர்த்தம்... இருக்கு? இந்த மனிதநேயம் எங்க போச்சுன்னு கேட்கறேன். வாழ்க்கைல உறவுகள் இல்லாத நிலை தேவையா...?உறவுகள்தான் வாழ்க்கைக்கு உயிர்னு சொல்றேன். அப்படிப்பட்ட உறவுகளின் பெருமையை சொல்ற படம்தான் `வாழ்த்துக்கள்'.இது ஒரு வியாபார சினிமாதானே...?இது முழுக்க முழுக்க வியாபார சினிமாவுக்குள்ள அத்தனை அம்சங்களோடத்தான் இருக்கு. நல்லதைச் சொன்னா கெட்ட சினிமா மாதிரி பார்க்கிற பார்வை இருக்கு.இதுல வியாபாரத்துக்கான எல்லாமும் இருக்கு. ஆனா ரசிகனை முட்டாளாக்கி அவமானப்படுத்துற நம்ப முடியாத இயல்புக்கு மாறான விஷயங்கள் இருக்காது. நம்புறமாதிரி நல்லதைச் சொல்லி இருக்கேன். இப்படித்தான் வாழ்க்கை இருக்கணும்னு உங்க மனசை ஏங்க வைக்கும்படி படம் இருக்கும்.இது ஒரு காதல் கதையா?படத்துல காதல் இருக்கும். கதிரவன் துறுதுறுப்பான இளைஞன். அவனைக் காதலிக்கிற பெண்தான் பாவனா. காதல்னா கண்டவுடன் காதல் ரகமல்ல. காதலுக்கு புரிதல் எவ்வளவு முக்கியம்னு படத்தைப் பார்த்தால் புரியும். பத்துப் பொருத்தம் பார்த்து வச்சு கல்யாணம் பண்ணினவங்களும் பாதியில பிரிஞ்சுடறாங்க.காதலிச்சு ஒண்ணு சேர்ந்தவங்களும் கொஞ்ச நாள்ல விவகாரத்துக்கு நிற்கறாங்க. ஏன் சரியான புரிதல் இல்லை. இதைத்தான் படத்தில் அழகா சொல்லி இருக்கேன். காதல், வாழ்க்கை எல்லாமே விளையாடுத்தனமா போய்க்கிட்டிருக்கிற அவலத்தை எச்சரிக்கையா சொல்லி இருக்கேன்.இயக்குனரா இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நடிப்பில் இறங்கிவிட்டீர்களே... 'பள்ளிகூடம்', 'எவனோ ஒருவன்' இப்படி?அது நண்பர்களுக்காக பண்ணியது. அந்தப் படங்கள் நல்ல படங்கள். பேசக்கூடிய படமா இருந்ததால நடிச்சேன். நல்ல படத்துல எந்த மாதிரியான விதத்திலாவது பங்கெடுப்பது மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயம்.மாதவனை அடுத்த படத்திலும் நாயகனா ஆக்கியிருப்பது பற்றி...?எனக்கும் மாதவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. எப்படியாவது தன் படம் ஓடினால் போதும்னு நினைக்கிற சுயநல நடிகரல்ல அவர். நல்ல படத்துல நடிக்கணும்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்.அது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தவித நடிப்பும் இல்லாம சகோதரர் போல பழகுறவிதம் இது எனக்குப் பிடிச்சு எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கு. அதனால தொடர்ந்து எங்கள் கூட்டணி தொடருது.
இயக்குனரா இருந்துகொண்டு இன்னொரு பக்கம் நடிப்பில் இறங்கிவிட்டீர்களே... 'பள்ளிகூடம்', 'எவனோ ஒருவன்' இப்படி?அது நண்பர்களுக்காக பண்ணியது. அந்தப் படங்கள் நல்ல படங்கள். பேசக்கூடிய படமா இருந்ததால நடிச்சேன். நல்ல படத்துல எந்த மாதிரியான விதத்திலாவது பங்கெடுப்பது மனசுக்கு சந்தோஷம் தரும் விஷயம்.மாதவனை அடுத்த படத்திலும் நாயகனா ஆக்கியிருப்பது பற்றி...?எனக்கும் மாதவனுக்கும் நல்ல புரிதல் இருக்கு. எப்படியாவது தன் படம் ஓடினால் போதும்னு நினைக்கிற சுயநல நடிகரல்ல அவர். நல்ல படத்துல நடிக்கணும்கிற ஆர்வமும் துடிப்பும் உள்ளவர்.அது எனக்குப் பிடிச்சிருக்கு. எந்தவித நடிப்பும் இல்லாம சகோதரர் போல பழகுறவிதம் இது எனக்குப் பிடிச்சு எங்களுக்குள் நல்ல புரிதலை ஏற்படுத்தியிருக்கு. அதனால தொடர்ந்து எங்கள் கூட்டணி தொடருது.
Monday, November 19, 2007
அண்ணன் பாமரன் கட்டுரை மூலமாக ஒரு வேண்டுகோள்


தமிழ். எம்.ஏ படத்திற்கான வீரியமிக்க குரலாக அண்ணன் பாமரன் அவர்கள் நக்கீரன்.காம் ல் எழுதியதை ஆதரித்தும் அதுவே எனது பார்வையாகவும் பதிவு செய்கிறேன்........இதை தமிழ்,தமிழர்கள் நலன்,என வாழும் மருத்துவர் அய்யா அவர்களின் பார்வைக்கும், தொல்தமிழர் அண்ணன் திருமா அவர்களின் பார்வைக்கும் கொண்டு வருகிறேன். தமிழ் திரைப்பட இளம் இயக்குனர்கள் இப்படியாக புறப்படுகிறார்கள் எனறும், மேலும் இது மாதிரியான பல திரைகதைகளை வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருக்கும் பல படைப்பாளிகளை தமிழ் தலைவர்களான அய்யாவும், தொல்.தமிழரும் அடையாளம் கண்டு, வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அன்பான வேண்டுகோள் வைக்கிறேன்.
செயல் மறந்து வாழ்த்துதுமே……
“தமிழ் படிச்சா இதுதான் கதி என அச்சுறுத்துகிறது படம்…”
“எம்.ஏ தமிழ் படிச்சா வேலை கிடைக்காதுன்னு எவன் சொன்னது?”
“தமிழ் படிச்சவன இப்படி வன்முறையாளனாவா காட்டறது?”
என ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள்
ஆனால் கற்றது தமிழ் அலசுவது அதைப்பற்றி மட்டும்தானா?
‘இந்து’ தொடங்கி ‘இந்தியா டுடே’ வரைக்கும் கிழித்துக் காயப் போட்டு விட்டார்கள் படத்தை. அடுத்த படமாவது சிறப்பாக அமைய ஆசி வேறு வழங்கியிருக்கிறது ஆ.வி.
அப்படியானால் இந்தப்படம் ?
‘கற்றது தமிழை’ யார் யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைவிடவும் யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்பதில் மட்டும் ஒரு ஓரப் பார்வையைச் செலுத்தினால் போதுமானது.
‘கற்றது தமிழ்’ தமிழ் படித்தவனின் நிலையை அலசுகிறது என்பதைக் காட்டிலும் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த சூழலையும் அலசுகிறது என்பதுதான் உண்மை.
அதுவும் இன்றிருக்கும் உலகமயம் தனியார்மயச் சூழலில்…
நினைவு தெரிந்து இதுவரை தமிழாசிரியர் என்றாலே அரைக்கிறுக்கர்களாய்…மற்றவரது கேலிக்கும் கிண்டலுக்குமான ஒரு பண்டமாய் மட்டுமே கோடம்பாக்க அயோக்கியர்களால் சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அதனை இந்தப் படம் மாற்றிக் காட்டியிருக்கிறது.
தமிழ் படித்தவர் தமிழ் இலக்கியம் படித்தவர் தமிழ் ஆசிரியர் என்பவர்கள் யாருக்கும், எவருக்கும் எந்த விதத்திலும் சளைத்தவர்களில்லை என்பதை உரக்கச் சொல்கிறது கற்றது தமிழ்.
“தமிழ் படிச்சவன்னா சோடா புட்டி கண்ணாடி மாட்டிகிட்டு…………தாடி வெச்சுகிட்டு…………ஜோல்னாப் பை போட்டுகிட்டு டொக்கான் மாதிரி இருப்பான்னு நெனைக்காதே…………தமிழ் சாந்தத்தை மட்டுமல்ல, ரௌத்திரத்தையும் பழக்கியிருக்கிறது” என ஒலிக்கும் பிரபாகரனின் குரல் பல லட்சம் தமிழர்களது உள்ளத்தில் புதைந்து கிடந்த குமுறல்.
தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என அச்சுறுத்துவதாக இருக்கிறது என உளறுபவர்கள்…………
“நானாவது ரெண்டு குறள் சொல்லிப் பொழச்சுக்குவேன்.
ஆனா ஹிஸ்டரி படிச்சவன்…………
ஜாகரபி படிச்சவன்…………
எக்கனாமிக்ஸ் படிச்சவன்…………
சோசியாலஜி படிச்சவன்…………
சைக்காலஜி படிச்சவன்…………
பொலிடிசல் சைன்ஸ் படிச்சவன்…………
எல்லாம் செத்தான்.
‘வாத்தியார் வேலை கூட கிடைக்காது” என்கிற வரிகள் அரங்கில் ஒலிக்கும் போது காதுகளில் எதை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் என்பது ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.
உண்மையில் இக்குரல் தமிழகத்திற்கு மட்டுமில்லை…………
இந்தியாவிற்கு…………
மூன்றாம் உலக நாடுகள் அனைத்திற்குமான குரல்.
உயர் கல்வியையும்…………
ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காக மட்டுமே கற்றுக் கொள்ளும் கல்வியையும் கிழித்துக் கூறுபோடும் குரல்.
அதுசரி எத்தனையோ துறைகள் இருக்கும்போது I.T என்கிற தகவல் தொழில் நுட்பத் துறையினர் மீது மட்டும் படத்தில் ஏன் இந்தப் பாய்ச்சல்?
நியாயம்தான்.
ஆனால்
மருத்துவர்கள்……….
பொறியியலாளர்கள்……….
கொளுத்தும் வெய்யிலிலும், கொட்டும் மழையிலும் தார் சாலை போடுபவர்கள்……….
என எவரும் இரவு பகல் பாராமல் உழைத்துவிட்டு வருகிறோம் எங்களுக்காக விடிய விடிய PUBS (மதுபானக் கூடங்கள்) களை திறந்து வையுங்கள்என்று கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அதி அத்தியாவசியக் கோரிக்கையை வைத்தவர்கள் இந்த I.T துறையினர் மட்டும்தான். தென்னக உணவக உரிமையாளர்கள் சங்கம் “பன்னாட்டு நிறுவனங்களும்……….பெரும் தொழில் நிறுவனங்களும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும் இச்சூழலில் அரசு இரவு வாழ்க்கை குறித்தும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தது இம்மேதைகளுக்காகத்தான்.
இங்கு பலரது பகல் வாழ்க்கையே பாடையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது……….
இரவு வாழ்க்கை குறித்து சிந்திக்கச் சொல்பவர்கள் மீது பாய்ச்சல் வராமல் வேறென்ன வரும்?
இது கற்றது தமிழை இந்த நூற்றாண்டின் ஒரே புரட்சிகரமான படமாக நிறுவும் முயற்சியும் அல்ல………. குறைகளே அற்ற உன்னத காவியம் என உயர்த்திப் பிடிக்கும் போக்கும் அல்ல.
30 களில் தொடங்கிய புராண, இதிகாச படங்களாகட்டும்……….
50 களில் உலுக்கிய பராசக்தி, ரத்தக்கன்ணீர் போன்ற சமூக மறுமலர்ச்சிப் படங்களாகட்டும்……….
60 களில் வந்த பாலச்சந்தர் வகையறாக்களின் நாடகபாணிப் படங்களாகட்டும்……….
70 களின் பிற்பகுதியில் ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த காமிராவை வயல்வெளிகளுக்கு இழுத்துச் சென்ற பாரதிராஜாவின் படங்களாகட்டும்……….
மரியாதைக்குரிய மகேந்திரன், பாலு மகேந்திரா போன்றவர்கள் தமிழ் இதயங்களை நெருடிச் சென்ற உதிரிப்பூக்கள், மெட்டி, வீடு போன்ற படங்களின் காலகட்டமாகட்டும்……….
அதை அப்படியே கடத்திக் கொண்டு போய் மசாலாக்களில் மூழ்கடித்த சகலகலாவல்லவர்களின் காலகட்டமாகட்டும்……….
என இப்படிப் பல காலகட்டங்களைத் தாண்டித்தான் வந்திருக்கிறது தமிழ் சினிமா.
“ங்கொம்மா……….ங்கொம்மா என்ன சேத்தி வைப்பாளா?” என்கிற வினாக்களும்……….
கொளுந்தியாளை அடைய “ஆசை”ப் படும்போது கொளுந்தனாரின் மீது ஏன் “உயிர்” ஆக இருக்கக்கூடாது? என்கிற ஆதங்கங்களும்……….
“என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ” என “கண்ணியத்தை”ப் பறை சாற்றும் குரல்களும்……….
ஒலிக்கின்ற “ஆரோக்கியமான” சூழலில்தான் கற்றது தமிழ் வெளிவந்திருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டால் மட்டுமே இப்படத்திற்கான தேவை புரியும்.
ரத்தமும் சதையுமாய் பிய்த்தெறியப்படும் அம்மாவின் சாவை நுகரும் ஏழு வயதுப் பிரபாகர்……….
பால்ய தோழி ஆனந்தி……….
வருடிக் கொடுக்கும் தமிழ் அய்யாவால் விடுதியில் வளரும் சூழல்……….
அவர் ஊட்டிய உணர்வால் படிக்கப்போன தமிழ் இலக்கியம்……….
பள்ளி நிர்வாகி குடும்பத்துக்கு ஊழியஞ் செய்து பெறும் தமிழாசிரியர் பணி……….
என நகரும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு சிகரெட்டுக்காகக் குறுக்கிடும் போலீசால் திக்குத் தெரியாமல் ஓடத் தொடங்குவதை ஒட்டி ஓடத் துவங்குகிறது படம்.
ஒரு காட்சியையும் மற்றொரு காட்சியையும் கண்ணுக்குப் புலப்படாத நூலிழையால் பிணைக்கும் பாங்கு……….
அடி முதல் நுனி வரை சாவுதான் எனக்கு விசிட்டிங் கார்டு என்பதற்கான சாட்சியக்கோர்வைகள்……….
நாயகனின் வசிப்பிட டேபிளில் தென்படும் ஆல்பர் காம்யூவின் அந்நியன் நாவல் புத்தகம்……….
அப்புத்தகத்தின்படி நகரும் இப்படத்தின் இறுதிக்கட்டக்காட்சி……….
பார்க்கும் ஒவ்வொருவருக்கும் விளம்பர இடைவேளையின்றி நகரும் படம்…
சேனல்களை மாற்ற முடியாத ரிமோட்…
ஏழு வயது சிறுவனாகவே இருந்து
ஏழு வயது சிறுவனாகவே மடிந்து போகும் மனோநிலை…
என வித்தை காட்டியிருக்கிறார் ராம்.
ஆனால் இதையெல்லாம் எழுதினால் எனது பெயரும் சைக்கோ.
ஆக சைக்கோக்களே சாதியின் பெயரால் மனிதர்களை குடிசையோடு கொளுத்தாதவர்கள்……….
ஆக சைக்கோக்களே மதங்களின் பெயரால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் இழுத்துக் கூறுபோடாதவர்கள்……….
ஆக சைக்கோக்களே இனத்தின் பெயரால் மழலைகள் பயிலும் பாடசாலைகளின் மீது குண்டு வீசி கொன்றழிக்காதவர்கள்……….
ஆக நாமும் ஒருவகையில் சைக்கோக்கள்தான்.
Tuesday, November 06, 2007
Sunday, October 14, 2007
படப்பிடிப்பின் பதிவுகள்-5
ஹீரோ -ஜீவன், ஹீரோயின் -காம்னா, இயக்குனர்- தமிழ்வாணன் மற்றும் படப்பிப்புக்குழுவினர்கள்..
அங்கு எங்களுக்கு உதவி செய்தவர் சூர்யா என்கிற தமிழர், அவரிடம் இருக்கும் உதவும்குணம் எங்களுக்கு பேருதவியாக இருந்தது.எந்த கவலையும் இல்லாமல் நம் ஊர் போன்று ஊர் சுற்றினோம் அதற்கு முக்கிய காரணம் எல்லா இடங்களிளும் நம் தமிழர்கள் இருக்கிறார்கள்.நம் தமிழர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு முருகன் கோயில் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடத்துக்கு சென்றதும் நம் ஊரில் இருக்கிற மாதரியான உணர்வுகள்.அங்கு ஒரு ரயில் நிலையத்துக்கு சென்று ஷூட்டிங் பர்மிஷன் வேண்டும் என்றதும் ஸ்டேஷன் மாஸ்டர் உடனே எந்தவிதமான் எதிர்பார்ப்புகளுமின்றி பர்மிஷனுக்கு ஏற்பாடுகள் செய்தார்.இதுபோன்று இன்னும் பல உதவிகளை அந்த நாட்டு மக்களே செய்து கொடுத்தார்கள்.
Saturday, October 13, 2007
படப்பிடிப்பின் பதிவுகள்-4
மச்சக்காரன் பாடல் படப்பிடிப்பிற்காக சுவிஸ்லாந்த் சென்று வந்தோம்...அந்த நாட்டில் சிறிய அளவில்கூட யாரும் நம்மை தொந்தரவு செய்யவில்லை,அனைவரும்நல்ல ஒத்துழைப்புகொடுத்தார்கள் அந்த நாட்டின் சுத்தம், மக்களின் மனிதாபிமானம்,முக்கியமாக போலிஸ்காரர்கள் நடந்துகொண்டவிதம்..அனைத்தையும் நம்ம நாட.டை ஒப்பிட்டுப்பார்க்கும்போது நாம் இன்னும் நிறைய வளரவேண்டும்...
Sunday, September 23, 2007
ஓடிவிளையாடுகாதலே-7
Saturday, September 22, 2007
ஓடிவிளையாடு காதலே-6
Friday, September 21, 2007
ஓடிவிளையாடு காதலே-5
ஓடிவிளையாடு காதலே-4
Saturday, September 15, 2007
சு.கீணனூர்

தூரத்து கரம்பில்
மேயும் ஆடு மாடுகள்,
நெல்லறுத்த வயல்க்காட்டில்
தப்பு கருது பொறுக்கும்
முக்காட்டுத்தலைகள்,
மெனைமெனையாய்
கட்டுத்தூக்கும்
மஞ்சள் தலை மனிதர்கள்,
சொனையை
காறித்துப்பியப்படி
நெல் கருதை
உதறி விடும்
வளையல் கைகள்,
ரோட்டோரமாய்
அடுக்கியிருக்கும்
கரும்பு கத்தைகளை
லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கும்
கரும்பு வெட்டு ஆட்கள்,
திட்டுதிட்டுயாய்
ஈரமுக்காட்டுடன்
ஆஞ்சி ஆஞ்சிக்குள்ளப்புட்டிகளை
நிரப்பும் மல்லாட்டை ஆசைகள்,
வெட்ட வெட்ட நீளும்
எலி வலைகளில்
வெட்டிப்பிடித்து
வறுபடும் சாராயாத்துக்கு
வெள்ளை எலிகள்,
என இன்னும் பிற
அடையாளங்களை மீறி
மழை நாட்களில்
நான்கு பக்கமும்
வெள்ளம் சூழ
"குட்டி இலங்கையாய்"
தத்தளிக்கும்
நான் பிறந்து
வளர்ந்து, வாழும்
என் கீணனூர் .
வீரமணி
Friday, September 14, 2007
நெகட்டிவ்
ஊருக்கு வந்த என்னிடம்
வெறு கண்ணசைவுகளோடு
நிறுத்திக்கொண்டாய்
என்னோடு பேச விரும்பியதை ...
நம்மிடமிருந்து நம்மை
விலகச்செய்தது
உன் அக்கா உனக்காக
கொடுத்துவிட்டுப்போன
சுருக்கம் நிறைந்த தாவணி...
என் அருகில் வாராமல்
உன்னைதடுத்தது
உன் பருவ வளர்ச்சி...
ஊரிலிருந்து புறப்பட்டு
வெகுநாட்களாகியும்
உன்னை இழந்துவிட்ட
பரிதவிப்பிலிருந்து மீளமுடியவில்லை ..
எனினும்
நீ மேய்த்துக்கொண்டிருந்த
ஆடுகளோடு சேர்த்து
எடுத்துக்கொண்ட
புகைப்பட நெகட்டிவ்
என்னிடம் இருக்கிறது
பத்திரமாக.....
வீரமணி
படப்பிடிப்பின் பதிவுகள் -3




இயக்குனர்தமிழ்வாணன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர்கள் .......
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தொடருக்கு தலைப்பை கொடுக்காமல் எழுதிவிட்டேன் நண்பன் அருள்தான் தலைப்பு வைத்து எழுது என்று சொன்னான்..பதிவின் 3வதுபகுதி இது இனி தொடர்ந்து சந்திக்கலாம் சக உதவி இயக்குனர்கள்மற்றும் முதல் நாள் முதல் நாயகன் ஜீவனுக்கு காட்சியை விவரக்கிறார் ஜீவன் ஏதோ யோசித்தப்படி இருக்கிறார் இயக்குனர் விவரத்து விட்டு எங்களிடம் வந்து ஷாட் ரெடி கூப்பிடுங்கள் என்கிறார் முகத்தில் ஏதோ ஓர்திருப்தியின்மை நாங்கள் "என்ன சார் ஒரு மாதிரியாக இருக்கீங்க" என்றுகேட்க அவர் "ஒன்னுமில்லை" என்று சொல்லிவிட்டு கேமராமேன் சாரிடமும் இணைஇயக்குணரிடமும் ஏதோசொல்லிக்கொண்டு இருக்கிறார் எங்களுக்கு (உதவியாளர்கள்) சிறுதயக்கம் சிறிது நேரத்தில் ஜீவன் வருகிறார் ஷாட் ஓ.கே ஆகிறது இயக்குனர் முகத்தில் சந்தோஷம்.... தொடரும்
படப்பிடிப்பின் பதிவுகள்-2
கள்வனின்காதலி படம் முடிஞ்சதும் நான் அந்தப்படத்தின் விளம்பரம் பப்ளிசிட்டி வேலையில இயக்குனர் ஆலோசனைப்படி தீவிரமாக இருந்தேன்... ஒருப்பக்கம் தனிமுயற்சியையும் ஆரம்பிசிட்டேன்.....இப்படியே ஒரு நாலுமாசம் போய்டுச்சி...எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார்..ஒரு கதாநாயகனும் கிடைத்தார்....சரி ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது தயாரிப்பாளருக்கு ஒரு துயரசம்பவம்..சினிமா சென்டிமென்ட் என்க்கு தாமதம்,,,அந்த கதாநாயகன் காத்திருந்துவிட்டு வேறுஒரு பெரிய நிறுவனம் மூலம்பெரிய நாயாகானாகிவிட்டார்... பிறகு ஒரு நாள் இயக்குனர் தமிழ் சார் தொலைபேசியில் கூப்பிட்டார் ...நானும் இன்னொரு உதவியாளர் முருகையாவும் சென்றோம்..மச்சக்காரன் கதையை சொன்னார்,,விவாதித்தோம்..கதை நன்றாகவும் விறுவிறுப்பாகவும் வளர்ந்தது மற்ற உதவியாளர்கள் அனைவரும் சேர்ந்து இயக்குனரின் ஆலோசனைப்படி திரைக்கதை அமைத்தோம் நாயகன் ஜீவனிடம் திரைகதையை சொன்ன இயக்குனர் வெற்றியுடன் வந்தார் தயாரிப்பாளர்க்கிடைத்தார் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் படப்பிடிப்பின்முதல் shot........
Thursday, September 13, 2007
படப்பிடிப்பின் பதிவுகள்-1
மச்சக்காரன் படப்பிடிப்பில் எனது உதவி இயக்குனர் அனுபவம் பற்றி ஒரு சிறிய தொடர் எழுதப்போகிறேன் 

அதன் படப்பிடிப்பு புகைபடங்களுடன் தொழில்நுட்பக்கலைஞர்களூடான எனது அனுபவம் பற்றியும் எழுதப்போகிறேன்..... இது பெரிய விஷயமில்லைதான் எனினும் எனது நண்பர்களின் வேண்டுகோளுக்காக....
சந்தேகம்

பூத்துக்குலுங்குகிறது
உன்னைப்பற்றிய
என்கனவுப்பூக்காடு....
நட்சத்திரக்கண்கொண்டு
என் ரகசியங்களை
வேவுப்பார்க்கிறது
உன்நினைவு சரடுகள்...
ஆலமர விழுதாய்
கிளை தாங்குகிறது
நாம் சேர்ந்து வாழ்ந்த
சில நாட்களின் ஞாபகங்கள்....
எப்பொழுதாவது
உன் கணவன்
என்னை ஒத்த
சில்மிஷங்கள்
செய்யும்போது
என்னை நினைத்துக்கொள்ளாதே...
எனக்குப்பிரையேறினால்
என் மனைவி
சந்தேகிக்ககூடும் என்னை...
வீரமணி
Wednesday, September 12, 2007
வெளுக்கும் சாயம்
Subscribe to:
Posts (Atom)










