Wednesday, October 04, 2006

ஒத்திகை

ஏரி களிமண் உருட்டி
உனக்குச் செய்துகொடுத்த
விளையட்டுச் சாமான்கள்
உன் சீதனத்தின் ஒத்திகை.

கொரக்கா தட்டை ஒடித்து
செய்து கொடுத்த பீப்பீகளின் ஒலி
உன் திருமண கெட்டிமேள
நாதஸ்வரத்தின் ஒத்திகை.

பூவரசம் பூ பறித்து
மோதிரம் செய்து
உன் விரலுக்கு அணிந்தது
உன் திருமண பரிசின் ஒத்திகை.

மண் வீடு கட்டி
அப்பா அம்மா விளையாட்டு
விளையாடியது
உன்குடும்ப வாழ்வின் ஒத்திகை.

ஒத்திகை பார்ப்பதற்கென்றே
ஒவ்வொருவரின் வாழ்விலும்
ஒருவன் இருக்கிறான்...

என்றாவது ஒருநாள்
அவனுக்கு பஃபூன் வேஷமாவது
கிடைக்குமென்ற நம்பிக்கையில்...

2 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//ஒத்திகை பார்ப்பதற்கென்றே
ஒவ்வொருவரின் வாழ்விலும்
ஒருவன் இருக்கிறான்... //

உணர்ச்சிபூர்வமான வரிகள்!
நல்ல கவிதை!

வாழ்த்துக்கள்!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//ஒத்திகை பார்ப்பதற்கென்றே
ஒவ்வொருவரின் வாழ்விலும்
ஒருவன் இருக்கிறான்... //

உணர்ச்சிபூர்வமான வரிகள்!
நல்ல கவிதை!

வாழ்த்துக்கள்!