Sunday, September 09, 2007

புழக்கத்தில் இருக்கும் வாசகம்


அருவங்கட்டை ,கம்மம்புல்,
என எருமைகள் மேய்ந்த
செல்லியம்மன் கோயில் திடல்
வெடிப்போடிக்கிடக்கிறது.

கரிசலாங்கன்னி,பொன்னங்கன்னி என
பூத்துக்கிடந்த வாய்க்காமேடு
கருவேலங்காடாகி
அனல் வீசுக்கிறது

ஊராகாலி மாடுகள் மேய்ந்த
மந்தக்கரை கலுங்கு குட்டை
வறண்டு போனதில்
மாடுகள் கேரளாவுக்கு
லாரி ஏறிவிட்டது..

பொரை, பன்னு முருக்கு என
தொங்கிய டீக்கடை வாசல்களில்
சரம்சரமாக தொங்குகிறது
பான்பராக், மாணிக்சந்த் குட்கா,

புடவை ,பாவாடை, ஜாக்கெட்துணியென
மூட்டையில் உலாவந்த ஜவளி
நைட்டி பிரா என உள்ளாடைகளாகவும்
தள்ளுவண்டிகளில் வீதியை சுற்றுகிறது.

.கேபிள் ஒயர்கள்
வீட்டுக்கு வீடு உலகம் உரையாடுகிறது....

எப்போதும் போல
இப்போதும் இருக்கிறது
காலம் கெட்டுப்போச்சென்ற வாசகம்

புழக்கத்தில்.....


வீரமணி

3 comments:

ஆடுமாடு said...

நண்பரே கவிதைகள் நன்றாக இருக்கிறது. நானும் உங்க சினிமாதுறைக்கு வேண்டியவன்தான். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
நீங்கள் யாரிடம் உதவியாளராக இருக்கிறீர்கள் என்பதை சொல்லலாமா?
ஆடுமாடு.
http://aadumaadu.blogspot.com

வீரமணி said...

வணக்கம். வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.....நான் தற்போது மச்சக்காரன் படத்தில் அசோசியட் டைரக்டராக ,திரு.தமிழ்வாணன் அவர்களிடம் பணியாற்றுகிறேன்...அன்புடன்

வீரமணி

Anonymous said...

தங்கள் விரைவில் இயக்குனராக வெற்றி பெற வாழ்த்துக்கள்.