Saturday, January 05, 2008

"க்"கை தூக்கச்சொன்னது தமிழ்





"க்"கை தூக்க சொன்னது தமிழ்




'அரவிந்தன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவை இசைமைப்பாளராக அறிமுகப்படுத்தியது அம்மா கிரியேஷன்ஸ் சிவா. அந்த படம் வெளிவந்த ஆண்டு 1997. அதன்பிறகு பட தயாரிப்பை நிறுத்திக்கொண்ட நிறுவனம் பத்துவருடங்களுக்கு பிறகு 'வாழ்த்துகள்' படத்தை தயாரித்துள்ளது. சீமான் இயக்கும் இப்படத்திற்கும் யுவன்தான் இசை.
































நேற்று நடந்த பாடல் வெளியீட்டு விழாவில் இதனை தெரிவித்த தயாரிப்பாளர் சிவா, தனக்கு உதவிக்கரம் நீட்டிய பிரமிட் சாய்மீரா நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கெண்டார்.
சத்யராஜ், பிரபு, பார்த்திபன், இராம.நாராயணன் கலந்து கொண்ட பாடல் வெளியீட்டு விழாவில் கார்த்திக் சிதம்பரம் பாடல்களை வெளியிட கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போல பார்த்திபனின் பேச்சில் சுவாரஸ்ய தோரணம்.
"ஒரு படத்திற்காக எனக்கு விக் செய்து கொடுத்தவர் 'விக் நல்லாயிருக்குதா சார்' என்று கேட்டார். நான் அவரிடம் மயிர் மாதரி இருக்கு என்று சொன்னதும் நான் கெட்ட வார்த்தை பேசுவதாக நினைத்து கோபப்பட்டார்.
விக் என்பது சிந்தடிக்கால் செய்யபடுவதாகும். ஆனால் நீங்கள் செய்து கொடுத்த விக் நிஜமான தலைமுடியை போல த்தரூபமாக இருக்கு. தலைமுடியை மயிர் என்றுதான் சொல்வார்கள். அதான் அப்படி குறிப்பிட்டேன் என்றதும் சமாதானமானார்.
அதேபோல் விக் வைப்பதற்கு பொருத்தமான நடிகர் சத்யராஜ் சார்தான். அவர் வைத்த விக்குகளிலேயே சிறந்தது பெரியார் வேடத்திற்காக வைத்ததுதான். அது விக் இல்லை அவருக்கு சூட்டப்பட்ட கிரீடம். எல்லோரையும் பெற்றெடுப்பது தாய்தான். ஆனால் சீமான் மட்டும் தமிழ்தாய் பெற்றெடுத்த மகன்" என்று பேச்சை முடிக்க அரங்கத்தின் கரவொலி காதை துளைத்தது.
இறுதியாக நன்றியுரையாற்றிய சீமான், இடைவிடாமல் இருபது நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். உலகின் மிக நீண்ட நன்றியுரை என்றுகூட சொல்லலாம்.
"பாஞ்சாலங்குறிச்சி படத்தில் பிரபு அண்ணன் எனக்கு உதவியிருக்காவிட்டால் இயக்குனராக ஆகியிருக்கமாட்டேன். எனவே அவருக்கு நன்றிகள். தன்னைப்போல பிறரையும் நேசி; பெற்றவர்களை காப்பாற்றாதவன் மற்றவர்களை காப்பாற்ற முடியாது என்ற சிந்தனைகளை விதைக்கும் கதைதான் வாழ்த்துகள்.
ஆரம்பத்தில் 'வாழ்த்துக்கள்' என்றுதான் பெயரிடப்பட்டிருந்தது. முதல்வரை சந்தித்தபோது வாழ்த்துக்களில் 'க்' இருந்தால் கிக்காக இருக்கும் 'வாழ்த்து+கள்' ஆகிவிடும் எனவே 'க்' கை எடுத்துவிடு என்றார். தமிழே சொல்லிவிட்டபோது திருத்தாமல் இருக்கமுடியாதே எனவே 'வாழ்த்துகள்' என்று மாற்றினோம்" என்றார்.

3 comments:

Anonymous said...

முதலில் தலைப்பை வாசியுங்கள். கட்டுரையில் 'க்' எழுத்தைத் தான் தூக்க சொல்லியுள்ளது.
அப்படி என்ன அவசரம் பிழை பார்க்காமல் பிரசுரிக்க?

வீரமணி said...

நண்பருக்கு நன்றி. தவறை திருத்திக்கொள்கிறேன் ..இனி இதுபோல் பிழை இருக்காது.

Anonymous said...

"க்" ஐத்தானே தூக்கச் சொன்னது?
நீங்கள் 'த்', 'ச்' எல்லாத்தையும் தூக்கிவிட்டீர்களே?

"'க்' கை"த்" தூக்க"ச்" சொன்னது தமிழ்" என்றுதான் தலைப்பு வந்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?

** தலைபை்பை விட்டு, பதிவுக்குள் பார்த்தால் இன்னும் நிறையத் தவறுகளுள்ளன. கவனித்தால் நன்று.