சாமுண்டி" ரத்தமும் சதையுமான வாழ்க்கை சு.தமிழ்ச்செல்வி அவர்களின் முதல் சிறுகதை நூல் சாமுண்டி.
மாணிக்கம், அளம், கீதாரி, கற்றாழை, ஆறுக்காட்டுத்துறை ,என இதற்குமுன்பு ஐந்து நாவல்களில் நம்மை வாழவைத்துவிட்டு சிறுகதை மூலம் நம்மிடம் உரையாடுகிறார்..
தொகுப்பில் உள்ள 8 கதைகளும் 8தலைமுறை வாழ்வு. என்னால் ஒரு கதையைப்படித்துவிட்டு அடுத்த கதையை படிக்க முடியவில்லை, மனதை ஏதேதோ செய்துவிடுகிறது பாத்திரங்களின் வாழ்க்கை.
தொகுப்பில் என்னை மிகவும் பாதித்தது கொடும்பாவி"யும் கன்னியாயி"யும்தான்.. கொடும்பாவியின் அம்மனி மன உளச்சல்,வேலை கிடைக்கவேண்டுமே என்கிற பரிதவிப்பு, கிடைக்காத போது பொங்கிபெருகும் கண்ணீரில் பொங்கியது என் கண்களிலும் கண்ணீர்..இந்த கதையை விடியற்காலை 5 மணியளவில் படித்துகொண்டு இருந்தபோது என்னையற்யாமல் அழுதுகொண்டிருந்தேன்...மழைபெய்ய ஆரம்பித்ததும் அம்மனியை போல நமக்கும் ஒரு நிம்மதிகிடைத்தாலும், கணத்துப்போன மனசில் இருந்து விடை பெறுவதற்கு வெகுநாட்களாகும்.
கன்னியாயியும் அப்படித்தான் புலிகள் காணாமல்போனதையும் நரிகள் நடமாட்டதையும், உதவும் போது கடவுளாவதையும் பற்றி பேசும் கதை. புலி பதுங்குவது பயந்து அல்ல பாய்வதற்கென என சொல்லும் லாவகமும் அழகோ அழகு மொத்தத்தில் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் நடையும் மொழி நேர்த்தியும், வெகு இயல்பான வழக்குகளும், வாசகனை மேலும்மேலும் ரசிகனாக்கி விடுகிறது..நாவல்கள் ஏற்படுத்திய அதேபாதிப்புகளை சிறுகதைகளும் ஏற்படுத்துகிறது சு.தமிழ்ச்செல்வி அவர்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக என்னால் பார்க்கமுடிகிறது..மேலும் ஆசிரியர் கலைஞர் அவர்களின் கரங்களால் பொற்கிழி பெற்றதற்கு வாழ்த்துகளை சொல்லிகொண்டு மேலும் மேலும் படைப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாசகனாக இருக்கிறேன் என சொல்லி அடுத்த படைப்புக்காக காத்திருக்கிறேன்.....
அன்புடன்
வீரமணி
1 comment:
மனதை நெகிழ்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர் தமிழ்ச்செல்வி. இவரின் படைப்புகளை வாசித்த பெரும்பாலானோர் கண்ணீரை வரவழைத்து விட்டது என்று சொல்ல கேட்டிருக்கிறேன். நீங்களும் அதையே சொல்கிறீர்கள். அளம் வாசித்திருக்கிறேன் அவரின் மற்ற படைப்புகளையும் வாசிக்க ஆவல்.
Post a Comment