சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற தங்கர் பச்சானின் "கார்த்திக்-அனிதா"திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில் தங்கர் பச்சான் பேசிய ஆவேசப் பேச்சு திரையுலத்தினரை திக்கு முக்காட வைத்துள்ளது. அவர் பேசியதாவது :
நானெல்லாம் நிஜமான கலைஞன் இல்லை, 36 வருடங்களாக என் தமிழினம் தமிழீழத்தில் செத்துக்கொண்டுள்ளது. குறைந்தபட்சம் அவர்களின் வாழ்க்கையை வைத்து என்னால் ஒரு படம் எடுக்க முடிந்ததா?
ரொம்ப வருடங்கள் கஷ்டப்பட்டு அவர்களின் வாழ்க்கைக் கதையைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தற்போதுதான் ஒரு கதையை உருவாக்கினேன். இதற்காக நான் கிட்டத்தட்ட 17 ஆயிரம் இலங்கை அகதிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அந்தக் கதையில் நடிக்க எந்த நடிகனும் முன் வரவில்லை.
"நான் கதை சொல்லி, எவன் எவனெல்லாம் அந்தப் படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னானுங்களோ, அவ்வளவு பயலுகளும், நடிகர் சங்கம் நடத்துன உண்ணாவிரத மேடையில ஒக்காந்துருந்தானுங்க".
இதுல பேருக்கு முன்னாடி புரட்சி, தளபதி-ன்னு வேற போட்டுக்கிறானுங்க! மானங்கெட்ட பயலுங்க.... இவனுங்களுக்கு அதுக்கு தகுதியே இல்ல. இப்ப இந்த மேடையில சொல்றேன் நல்லா கேட்டுக்கங்க..... இனிமே எந்தப் பயலாவது பேருக்கு முன்னாடி புரட்சி, தளபதி -ன்னு பட்டப் பேரு போட்டுக்கிட்டீங்க.......
"அவ்வளவுதான்.
எவனும் போடக்கூடாது".
உண்மையான புரட்சின்னா அது முத்துக்குமரன் செஞ்சதுதான்.... அவனோட தியாகத்துக்கு முன்னாடி நான் வெட்கி தலை குனிகிறேன்! அதுனால எல்லாரும் தீக்குளிச்சுட்டு சாவுங்க-ன்னு சொல்லல.... அவன மாதிரி உண்மையான உணர்வோட இந்தப் போராட்டத்த ஆதரிக்க கத்துக்கங்க... என்றார். பார்வையாளர்கள் சில நொடிகள் கைதட்ட மறந்து முகத்தில் ஈயாடாமல் அமர்ந்திருந்தனர்.
1 comment:
யெல, ஒருத்தன் தான் (முதுகும்மரன்) லூஸ் நா, மெட்ராஸ் ல இருக்கார யெல்லா பயல்கலும் லூசாடா?
Post a Comment