Wednesday, June 16, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்





இரத்தின புகழேந்தி


நான் பள்ளிக்கூட நாட்களில் கவிதை புத்தகம் ஏதாவது இருந்தால் தாருங்கள் என கேட்க ,அறிவுமதியின் "ஆயுளின் அந்திவரை"யை எனக்கு கொடுத்து புண்ணியம் கட்டிக்கொண்டவர் , அந்த புத்தகத்தை படித்துவிட்டு நானும் கவிதை எழுத ஆரம்பித்த அந்த நாள்,
எங்க அப்பாவிடம் அடிவாங்கிய நாள் தான் நான் எழுத வேண்டும், சினிமா துறைக்கு போகவேண்டும், என்று கங்கணம் கட்டிக்கொண்ட நாள்......

பிறகு இவரின் "மண்கவுச்சி" தான் என் திரைக்கதைக்கான முதல் களம், தொடர்ந்து இவருடைய அனைத்து படைப்புகளும் எனது காட்சி அமைப்புகளுக்கு உறுதுணையாக இன்றுவரை இருக்கிறது..நான் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கு இவரும்,கண்மணியும் அறிமுகமில்லாத நண்பர்கள்..

இவரின் அன்பும், வாழ்த்துகளும் எனக்கு பெரிய ஒத்தாசை...முல்லை நில சிறுவர்கள் விளையாட்டை உலகுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தளார்,எங்கள் ஊர் படைப்பாளிகளில் அறிவுமதியின் முதல் செல்லபிள்ளை படைப்பாளர் இவர்தான்......
பள்ளிஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். கிராம அடையாளங்களை தொலைக்காமல் இருக்கவேண்டும் என்ற ஈடுப்பாட்டுடன் இருக்கும் இவரின் படைப்புகள் எல்லாமே தமிழில் மிக முக்கியாமான படைப்புகள் ஆகும்.,


இவரின் படைப்புகள்
1.மண்கவுச்சி
2.நகர்குருவி
3.கிராமத்து விளையாட்டுகள்,
4.தமிழக உணவு முறைகள்,
5.மரபுவழி அறிவுமுறை,
6.வன்னிய சாதிப்பிள்ளைகள்

1 comment:

- யெஸ்.பாலபாரதி said...

எலேய்.. மாப்பி.. இந்த தொடர் நல்லா இருக்கு. ஆனா வரிசை எண் போடவும். மேலும் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரத்தின புகழேந்தி அவர்களின் வலைப்பக்கத்தையும் அறிமுகப்படுத்தலாமே.. http://mankavuchi.blogspot.com/

வாழ்த்துக்கள்.

தோழன்
பாலா