சந்தோஷம் தொலைத்த
பொழுதொன்றில்
புறப்படுவேன் உன்னிடம்...
தனிமைகளற்ற நெருக்கடியில்
குலுங்கித் தவிக்கின்றன
உன் வளையல் கரங்கள்
ஒதுங்கி சைகைகளில்
தனிமைப்படுத்துவாய்
சாமி அறைக்குள்
குறுக்கிட்டு அழைக்கும்
யாருடையதோ -
கொலுசுச்சத்தம்
போகட்டுமென அவசரத்தில்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் சுவை
ஞாபகத்தில் இல்லை
உனக்கெப்படியென
கேட்க்கமுடியாது
புறப்படும் அவசியம்
நேருமெனக்கு
உள்ளங்கை அழுந்த
அழுத்திக்கொள்ளும்
மிச்சத்தில்
வாழ்ந்துகொள்வேன்
மறுபடியும் உன்னை
சந்திக்கும்வரை.
3 comments:
நன்று! நன்றி!
நன்றி சேரல்.
போகட்டுமென அவசரத்தில்
பகிர்ந்து கொண்ட
முத்தத்தின் சுவை
ஞாபகத்தில் இல்லை
ஞாபகத்தில் இல்லை - கொஞ்சம் துருத்துகிறது.
மற்றப்படி கவிதை நன்று
Post a Comment