Monday, August 14, 2006

மெரினா பீச்சும். கன்றாவி காதலும்...

சிந்திக் கிடக்கின்ற பூக்களிலும்
உடைந்து கிடக்கின்ற
வளையல் துண்டுகளிலும்
மனசு நிரம்பும் காமத்தில்.....

திரும்புகின்ற இடத்தில் எல்லாம்
உதட்டு முத்தம்,
முடி கோதல்,
விரல்கள் சேரல்.....

தனிமையில் கடலை வேடிக்கை
பார்க்கப் போனால்
காம வேடனாகிப் போகிறது
மனசு...

இயலாமையை
மணல் கிளறி
தூற்றியபடி சொல்ல
வேண்டியிருக்கிறது

வக்காளி இனி பீச் பக்கம்
தனியாவே வரக்கூடாது....
.........
.........
.........

8 comments:

Prawintulsi said...

க்ரேட்... ரோம்ப ரச்சிசேன்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அடே! மெரினாவில இவ்வளவு விசயம் நடக்கா,,,???ஆச்சரியாமா?? இருக்கையா?,,
யோகன் பாரிஸ்

G.Ragavan said...

அதான பாத்தேன்....தனியாப் போகக் கூடாதுன்னுதான நினைச்சீங்க. ஹா ஹா ஹா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

"தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்,,,,சார் இன்னா சார் தனியா வந்துகீறீங்க? Company வேணுனா சொல்லு சார்...கூச்சப்படாம கேளு சார்" - சிறுவர்கள் தன்னை இப்படிக் கலாய்த்தாக என் அப்பாவி (?) நண்பன் ஒருவன் chat-இல் சொன்னான்...

தருமமிகு சென்னை!!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//வக்காளி இனி பீச் பக்கம்
தனியாவே வரக்கூடாது....//

enna solla?

uNmai!

Radha N said...

யதார்த்தம்!

யாத்ரீகன் said...

நச்சுனு உண்மைய.. சரியான வார்த்தை ப்ரயோகம்..

பாரதி தம்பி said...

//வக்காளி இனி பீச் பக்கம்
தனியாவே வரக்கூடாது//
கரீக்டு தலீவா..அங்குன அவிய்ங்க பண்ற அளப்பறையைப் பார்த்தா மனசுக்குள்ள நம்ம பயபுள்ளைக நெனனைக்கிற வார்த்தைகளைப் அப்படியே சொல்லிபுட்டீக...