Saturday, August 26, 2006

ஒயின் ஷாப் கவிதை

எச்சில் பண்டங்கள் சிதறிகிடக்கும்
ஒயின்ஷப் பாரில்
எப்பொழுதாவது நடக்கும்
நண்பர்களின் மது விருந்து

சைடிஷ்களை பரப்பிவைத்து
அளவு சரியாக ஊற்றுவான் அதிலொருவன்
முதல் சுற்றில் மட்டும்

மிக்சர்,பொடிமாஸ்,சில்லிசிக்கன் என
எத்தனை பெரிய அயிட்டங்கள் இருந்தாலும்
ஊறுக்காயிக்கு இணை எதுவுமில்லை

ஆஃப் போதுமென ஆரம்பித்து
ரெண்டு ஃபுல்லை தாண்டியிருப்போம்
இரவு 12 மணிக்குள்

போதையேறிய பாசத்தில்
கொட்டித்தீர்ப்பார்கள்
ஒவ்வொருவரின் அந்தரங்களையும்

பிறகொரு நாள் கூடலாம் என
போதையோடு பிரிந்து
விடைபெறுவார்கள் ஒவ்வொருவரும்
தீர்ந்து போன அந்தரங்கங்களை
மறுபடியும் சேகரிக்க!

9 comments:

Anonymous said...

சூப்பரப்பூ

We The People said...

சூப்பர் தலீவா....

//தீர்ந்து போன அந்தரங்கங்களை
மறுபடியும் சேகரிக்க!//

நல்லா வந்திருக்கு....அசத்திடீங்க

ப்ரியன் said...

/*பிறகொரு நாள் கூடலாம் என
போதையோடு பிரிந்து
விடைபெறுவார்கள் ஒவ்வொருவரும்
தீர்ந்து போன அந்தரங்கங்களை
மறுபடியும் சேகரிக்க!*/

கவிதை அருமை வீரமணி..சில ஆங்கில கலப்பினை தவிர்த்திருக்கலாம்

கார்த்திக் பிரபு said...

naala than iruku angila kalppu ippodhellam thavirkka mudiya ondragi vittadhu

இளவெண்ணிலா said...

தி.க. தலீவர் பேரு வச்சுக்கிட்டு இப்படி கவித எழுதுறீங்கோ..அடுத்த முறை ஒயின்ஷாப்பில் 1 மணி வரை இருந்து இன்னும் பெரிய கவிதையாக எழுதவும்:)

நவீன் ப்ரகாஷ் said...

//போதையேறிய பாசத்தில்
கொட்டித்தீர்ப்பார்கள்
ஒவ்வொருவரின் அந்தரங்களையும்//

:))

வேந்தன் said...

நழ்லா எள்திருக்கீங்கோ! மப்புல பின்னூட்டம் போட்டதனால இப்படிதான் இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கோ

Unknown said...

/மிக்சர்,பொடிமாஸ்,சில்லிசிக்கன் என
எத்தனை பெரிய அயிட்டங்கள் இருந்தாலும்
ஊறுக்காயிக்கு இணை எதுவுமில்லை/

:))))

/தீர்ந்து போன அந்தரங்கங்களை
மறுபடியும் சேகரிக்க! /

!!!!!!!

நல்லாருக்குங்க கவிதை...

பாரதி தம்பி said...

//சைடிஷ்களை பரப்பிவைத்து
அளவு சரியாக ஊற்றுவான் அதிலொருவன்
முதல் சுற்றில் மட்டும்//

அசத்தல்..