Friday, May 26, 2006

கொட்டாங்குச்சி மார்பகம்

பறை அதிர
உயிர் அதிரும்
சாவு வீட்டில்

ஊத்திக்கொண்ட போதைக்கு
அடிபட்டு கிழியும்
பறை மேளமும்
சட்டி மேளமும்

மாருக்கு வலிக்காது
மார் அடிக்கும்
மருமகள்களின் ஒப்பாரிகளில்
சுதி ஏதும் இருப்பதில்லை

தப்பு மேளக்காரனை
"என்னா அடி அடிக்கிறீங்க...
விளாசுங்கடா"
என வீராப்பாய் பேசி
பறைசாற்ற வேண்டும்
பங்காளி என்பதை நிரூபிக்க

யாருக்கும் தெரியாமல்
பொம்பளை வேசங்கட்டிய
உரிமை செட்டுக்காரனின்
கொட்டாங்குச்சி
மார்பு குலுக்கலை
ஏக்கத்தோடு பார்த்திருக்கலாம்
என்னைப்போலவே
துக்கம் விசாரிக்க வந்த
வேறுசிலரும்.

18 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சிறந்த கவிதை! மேலும் உற்சாகமாகத் தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

J S Gnanasekar said...

கலக்கிட்டீங்க!

-ஞானசேகர்

கோவி.கண்ணன் said...

உணர்வுள்ள கவிதை - தலித் இலக்கிய சாயல் இருக்கிறது... நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

வீரமணி said...

பாராட்டிய அனைவருக்கும் என் நன்றிகள் :)

Muthu said...

//என்னைப்பற்றி: போகப்போக தெரிஞ்சிப்பீங்க :) //

அப்படி போடுங்க அரிவாளை...

வீரமணி,

கவிதை அருமையாக உள்ளது.(இதில் தலித் இலக்கிய சாயல் என்னங்க இருக்கு?

வீரமணி said...

நன்றி முத்து.

//.(இதில் தலித் இலக்கிய சாயல் என்னங்க இருக்கு?//

எனக்கும் அதாங்க புரியல :(

கோவி.கண்ணன் said...

//.(இதில் தலித் இலக்கிய சாயல் என்னங்க இருக்கு?//

எனக்கும் அதாங்க புரியல :(//
அந்த சூழலை வைத்து கவிதை எழுதியிருக்கிறீர்கள்... பேச்சு வழக்கு இயல்பு மாறாமல் தலித் இலக்கியத்தில் இருக்கும்

Osai Chella said...

Loved the simplicity in your writings. keep it up.

anbudan
OSAI CHELLA
www.osai.tamil.net

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நன்றாகவிருக்கிறது.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

தேவதச்சனின் காத்திருப்பு (அல்லது காத்திருத்தல்) கவிதையும் செத்த வீடு பற்றிப் பேசும். ஊர் நினைவுகளை அள்ளிவரச் செய்த கவிதை அது. உங்களுடையதும்..

Anonymous said...

நல்லாயிருக்குங்க கவிதை. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

-முபாரக்

கார்த்திக் பிரபு said...

nalla kavidhia..thalaipukkey niraya per varaaanga paarunga(nanum thaaan)

மஞ்சூர் ராசா said...

யாருக்கும் தெரியாமல்
பொம்பளை வேசங்கட்டிய
உரிமை செட்டுக்காரனின்
கொட்டாங்குச்சி
மார்பு குலுக்கலை
ஏக்கத்தோடு பார்த்திருக்கலாம்
என்னைப்போலவே
துக்கம் விசாரிக்க வந்த
வேறுசிலரும்.

இந்த வரிகளில் உண்மை சுடுகிறது. வித்தியாசமான நோக்கு.
வாழ்த்துக்கள்.

Prawintulsi said...

மீண்டும் நானே தான் ப்ரவீன்,

இந்தக் கவிதை க்ரேட்.நல்ல கவிதைக்கு முக்கியம் வாழ்கயின் எதார்த்தம்,வாக்கினில் எளிமை,உண்மயில் தெளிவு.அனைத்தும் நிறம்பியுள்ளது இக்கவிதை.
மிக நன்று!!!

Muse (# 01429798200730556938) said...

வீரமணி,

மிக மிக அருமையாக இருக்கிறது.

புதுமைவிரும்பியின் கவிதைகளை படித்து ரஸித்த எனக்கு தங்களின் கவிதைகளும் சுவையூட்டுகின்றன. தொடர்ந்து புனையுங்கள்.

Radha N said...

கவிதை இயல்பாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பரே.

பாரதி தம்பி said...

உண்மையான செறிவான வார்த்தைகள்..வாழ்த்துக்கள்.

சாம் தாத்தா said...

அருமையான கவிதை.

என் கிராமத்துச் சாவுகளை நினைவுபடுத்தும் வகையில்
இருந்தது. (பங்காளி வீராப்பு, மருமகள்கள்)

வாழ்த்துக்கள்.