Wednesday, June 07, 2006

கறுப்புப்பெட்டி

இரட்டை அர்த்ததில்
பேசும் போது
புரிந்து கொண்டாலும்
எதுவும் நிகழாதது போல
பேசிக் கொண்டிருப்பாய்

பார்வையை
சரியாக கணித்துக் கொண்டு
மிக இயல்பாய்
சரி செய்துகொள்வாய்
மேல் தாவணியை

முகம் பார்த்து பேசுகையில்
என் பார்வை தடுமாற்றத்தை
பத்திரப்படுத்திக் கொள்ளும்
உன் கறுப்புப் பெட்டியை
உடைத்துப் பார்க்க வேண்டும்

என்னிடமிருந்து
எதை எதையெல்லாம்
சேமித்து
வைத்திருக்கிறாயென.

6 comments:

Bharaniru_balraj said...

என்ன இருந்தாலும் உங்களைப் பற்றி இவ்வளவு வெளிப்படையாகச் சொல்லியிருக்க்க கூடாது.

கவிதை நல்லாயிருக்குது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அருமையான கவிதை!
---------------------
இப்போதுதான் உங்கள் Profileஐப் படித்தேன். நீங்கள் எடுக்கும் படம் தரமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைய வாழ்த்துக்கள்.

வீரமணி said...

இங்கு நான் என்பது நான் மட்டுமல்ல மட்டுமல்ல பால்ராஜ், நம் அனைவருக்குள்ளும் இருப்பவன் தான் :)

மிக்க நன்றி பால்ராஜ்.

வீரமணி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி சேரல். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

Chandravathanaa said...

வணக்கம் வீரமணி
இன்றுதான் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன்.
கவிதைகளில் அழகும் சுவையும் தெரிகின்றன. ரசித்தேன்.
தொடர்ந்தும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Ram said...

ஹ்ம்ம்... இதுதான் முதல்முறை உங்க பக்கத்துக்கு வர்ரது...நல்லத்தான் எழுதுறீங்க... கொஞ்சம் நல்ல கிராமத்து களத்தில் நல்ல சிறுகதைகளாக எழுதுங்களேன்... உங்கள் எழுத்து ஓட்டத்துக்கு அது பெட்டர். மேலும் கதை எழுதறது உங்க கரியருக்கும் பெட்டர்.

ஒரு உண்மைய சொல்லனும்ன்னா நீங்க எழுதின எதையும்மே என்னால கவிதன்னு ஒத்துக்கமுடியல.... உண்மயா சொல்றேன்.

சிறுகதைகள் முயற்சிபண்ணிப்பாருங்க...!!