Saturday, June 12, 2010

எங்கள் ஊர் எழுத்தாளர்கள்










த.பழமலய்

தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படும்பொழுது அதிலே கவிஞர் த.பழமலய்க்கும் நிச்சயமான ஓர் இடம் உண்டு.
கவிஞர் பழமலாய் மக்கள் இயக்கத்திலே இணைந்து மனித நேசிப்பினை உள்வாங்கிக் கொண்டார். கிராமிய மண்ணிலே வேர் கொண்ட எளிமையை ஆட்சிப்படுத்தினார். சாதாரண மக்கள் வாழ்க்கையில் ஏற்படும், சட்டென்று கண்களுக்குப் புலனாகாத, சிறு சிறு சலனங்கள் கூட கவிதைகளுக்கான உயிர்ப் பொருளாகப் பழமலய் வசப்படுத்தினார்.

["எதுவும் பெரிய மசுரு இல்லை நிறைய எழுதுங்கடா"ன்னு எங்களுக்கு துணிச்சல் கொடுத்தவர், "சினிமா அப்ப ரொம்ப கஷ்டம் இப்ப எப்பிடி?" என்று தெரியாத மாதிரி கேட்பார், "அறிவுமதி, தங்கர்ல்லாம் இருக்காங்க இல்ல போங்க போங்க" என்று சொன்னவர்]

இவரின் படைப்புகள்
1.சனங்களின் கதை, 1996
2.குரோட்டன்களோடு கொஞ்ச நேரம், 1991
3.இவர்கள் வாழ்ந்தது, 1994
4.இன்றும் என்றும், 1998
5.முன் நிலவுக்காலம், 1999
6.புறநகர் வீடு, 2000
7.இரவுகள் அழகு, 2001
8.வேறு ஒரு சூரியன், 2002
9.அண்ணன் குப்புசாமி இன்னும் ஆழமானவர்-வாழ்க்கைக் குறிப்புகள், 1978
10.நரபலி:தெய்வங்கள்,திருவிழாக்கள், 2002
11.திருக்குறளார் வீ.முனிசாமி வாழ்வும் பணியும், 2003
12.பாம்புகள் சிறுகதைகள், 2003
13.தெரியாத உலகம், 2004
14.தருமபுரி(தகடூர் நாட்டுத் தகடூர்) மண்ணும் மக்களும், 2005

2 comments:

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

வாழ்த்துகள் வீரமணி எழுத்தாளர் அறிமுகம் தொடரட்டும்

முனைவர் இரத்தின.புகழேந்தி said...

வாழ்த்துகள் வீரமணி நம்ம ஊர் எழுத்தளர்களை அறிமுகம் செய்வது சிறப்பாக வருகிறது தொடருங்கள்