Wednesday, December 14, 2011

சென்னை பட விழா-1day

9-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 14-12-11 அன்று திரையிடப்பட்ட
படங்களும், அதை பற்றிய குறிப்புகளும்...
உட்லண்ஸ், 11.00 AM

PECHORIN (2010 / ரஷ்யா)
இயக்குனர் : Roman Khrushch

* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.

*

5:30 PM -

THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne

குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10:30 AM

THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon

ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.

*

12.45 PM

OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz

காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.

*
3.15 PM

OTELO BURNING (தென் ஆப்பிரிக்கா/ 2011)

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.

*****

ஃபிலிம் சேம்பர் -

10 :00 AM

THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi

38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.

*

12.30 PM

THE DISPENSABLES (ஜெர்மெனி/ 2009)
இயக்குனர் : Andreas Arnstedt

வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.

*

3.30 PM

SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki

கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.

*

சத்யம் ஸ்டூடியோ 5

10:00 AM

LENINGRAD COWBOYS GO AMERICA (பின்லாந்து)
இயக்குனர் : Aki Kaurismäki

பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!

*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3

10.00 AM

JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk

போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!

*

12.15 PM

AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani

சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது! படங்களும், அவை பற்றிய

உட்லண்ஸ், 11.00 AM

PECHORIN (2010 / ரஷ்யா)
இயக்குனர் : Roman Khrushch

* Lermontov-ன் 'A hero of Our Time' என்ற புகழ்பெற்ற ரஷ்ய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். Pechorin-ன் "நான் பெர்சியா பயணிக்கிறேன். போகும் வழியிலேயே நான் இறந்துவிடலாம்," என்ற வரிகளில் துவங்குகிறது கதை. நாயகன் தாம் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கிறான். அந்த நினைவுகள் தருகின்ற பலதரப்பட்ட உணர்வுகளை குறிப்பால் சொல்லும் படைப்பு.

*

5:30 PM -

THE KID WITH A BIKE (பெல்ஜியம்/ பிரான்ஸ்/ இத்தாலி/ 2011)
இயக்குனர்கள் : Jean-Pierre and Luc Dardenne

குழந்தைகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் 11 வயது சிறுவன் Cyril, தன்னைக் கைவிட்ட தந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறான். அவனுக்கு வெகுவாக உதவுகிறாள், Samantha என்ற பெண். அடுத்தடுத்து திருப்பங்கள் வியக்கவைப்பவை. மனிதத்தைச் சொல்லும் உணர்வுப்பூர்வமான படைப்பு என்று இப்படத்தை 'தி டெலிகிராப்' புகழாரம் சூட்டியிருக்கிறது. கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டு, Grand Prix விருதைத் தட்டிச் சென்ற படம்!

****

உட்லண்ட்ஸ் சிம்பொனி

10:30 AM

THE THREE WAY WEDDING (பிரான்ஸ்/ 2010)
இயக்குனர்: Jacques Doillon

ஒரு சுவாரசியாமான நாடக ஆசிரியர். அவரது புதிய நாடகத்தில் நடிக்கும் இருவரில் ஒருவர், அவருடைய முன்னாள் மனைவி. மற்றொருவர், அந்த முன்னாள் மனைவியின் காதலன். இம்மூவரை மையமாகக் கொண்டு நகரும் கதை.

*

12.45 PM

OGUL - THE SON (துருக்கி/2011)
இயக்குனர் : Atilla Cengiz

காதலியைச் சந்திப்பதற்காக, முதல் முறையாக தனது சொந்த ஊரில் இருந்து புறப்படும் 18 வயது இளைஞன் Soner. ஆபத்து, துயரம் என பல திருப்பங்களைத் தரும் பயணம் அது. இரு மகன்களை கதை, இரு தந்தைகளின் கதையாவதே ஹைலைட்.

*
3.15 PM

OTELO BURNING (தென் ஆப்பிரிக்கா/ 2011)

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலையான காலகட்டத்தில், அப்போதைய இளம் தலைமுறையினரின் வாழ்க்கையைக் காட்டும் படைப்பு. உணர்வுப்பூர்வமான இளைஞர்களின் கதைகளைச் சொல்வதோடு, தென் ஆப்பிரிக்காவின் அன்றைய சமூக - அரசியலை சிறுவர்களின் பார்வையில் காட்டியிருப்பது சிறப்பு.

*****

ஃபிலிம் சேம்பர் -

10 :00 AM

THE WEEPING WILLOW (2005/ ஈரான்)
இயக்குனர் : Masjid Majidi

38 ஆண்டுகளாக பார்வையற்றவராக இருந்த கல்லூரிப் பேராசியருக்கு, சிகிச்சை ஒன்றில் திடீரென பார்வை கிடைக்கிறது. உலகை கண்களால் பார்க்கத் தொடங்கிய பிறகு அவருக்கு ஏற்படும் சிக்கல்கள், அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை மையமாகக் கொண்டது, இப்படம். சுவாரசியமான கதைக் களம். ஈரானிய நடுத்தர மக்களின் வாழ்க்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது. உலக அளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம்.

*

12.30 PM

THE DISPENSABLES (ஜெர்மெனி/ 2009)
இயக்குனர் : Andreas Arnstedt

வறுமையில் வாடும் குடும்பத்தில் 11 வயது சிறுவன் படும் துயரமே படத்தின் மையம். குடிக்கு அடிமையான அம்மாவோ மனநல காப்பகத்தில். குழந்தைக்கு படிப்பைக் கூட தரமுடியாத அப்பா தற்கொலை செய்துகொள்கிறார். அப்பா இறந்தது வெளியில் தெரிந்தால், தன்னை குழந்தைகள் காப்பகத்துக்கு கொண்டு சென்றுவிடுவார்களோ என அந்தச் சிறுவனுக்கு அச்சம். அப்பாவின் மரணத்தை பற்றி வெளியில் தெரியாமல், சடலத்துடன் இரு வாரங்கள் கழிக்கிறான். பிறகு? இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறது, திரைக்கதை.

*

3.30 PM

SHADOWS IN PARADISE (பின்லாந்து/ 1986)
இயக்குனர் : Aki Kaurismäki

கதையில் நாயகன், உறவுகள் யாருமில்லாத துப்புறவு தொழிலாளி. சூப்பர் மார்க்கெட்டில் கிளார்க் ஆக இருக்கிறாள், நாயகி. இருவரும் அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள். ஆனால், தங்கள் காதலை இருவருமே மறைத்து வைத்துக்கொள்கிறார்கள். அதன் விளைவை உணர்வுப் பூர்மாக சொல்கிறது, இந்த ரொமான்டிக் படம். 1987-ல் சிறந்த படத்துக்கான Jussi Awards வென்றுள்ளது.

*

சத்யம் ஸ்டூடியோ 5

10:00 AM

LENINGRAD COWBOYS GO AMERICA (பின்லாந்து)
இயக்குனர் : Aki Kaurismäki

பின்னிஷ் இசைக் கலைஞர்கள் குழு ஒன்று, உலகப் புகழ் பெறவும், பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா பயணிக்கிறது. சுவாரசியம் திருப்பங்களும் நிறைந்த அந்தப் பயணம் தான் படம். Empire magazine's "The 100 Best Films Of World Cinema" in 2010 பட்டியலில் 88-வது இடத்தில் இடம்பெற்றது, இப்படத்தின் சிறப்புகளுள் ஒன்று!

*
ஐநாக்ஸ் ஸ்க்ரீன் 3

10.00 AM

JOANNA (போலந்து/ 2010)
இயக்குனர் Feliks Falk

போர்ச் சூழல். போருக்குச் சென்ற கணவன் திரும்பவில்லை. அவன் நிலை என்னவென்று தெரியாத இளம் மனைவி, ஒரு யூதச் சிறுமியை காப்பற்ற முயற்சிக்கிறாள். அதற்காக ஜெர்மானிய அதிகாரியை காதலிக்க வேண்டிய கட்டாயம். அரசியல், போர், அவலம்... இத்தகைய பின்புலத்தில் அன்பை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் படம்!

*

12.15 PM

AMNESTY (அல்பேனியா/ 2011)
இயக்குனர் : Bujar Alimani

சிறையில் அடைக்கப்பட்ட தனது கணவரை எல்சாவும், தனது மனைவியை ஸ்பெடிமும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி சந்திக்கிறார்கள். அல்பேனியாவின் சட்டவிதிகளின்படி, சிறையில் இருக்கும் தங்களது கணவருடன் மனைவியோ, மனைவியுடன் கணவனோ மாதம் ஒருமுறை உறவாட அனுமதிக்கப்படுவர். தங்கள் இணையைச் சந்திக்க வரும் நாயகியும் நாயகனும் பழகத் தொடங்குகின்றனர். அங்கே உறவு மலர்கிறது. பிறகு..? - அல்பேனிய சட்ட நடைமுறைகள், அங்குள்ள வாழ்க்கை முறை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் இது!

No comments: