Saturday, May 27, 2006

தாத்தாவின் கவிதை

அண்ட வெட்டிகினு இருந்தவன
நாலஞ்சுபேரா வந்து

"யோவ் தாத்தா வந்து
ஓட்டு போட்டுட்டு வந்துறு"-ன்னு
கூப்டதுக்காக

கட்டுன கோவணத்தோட ஓடியாந்து
ஓட்டுப் போட்டு
இவனுவள சட்டசபைக்கு அனுப்பி
எங்களுக்கு ஏதாச்சும் செய்யுங்கடான்னா...

மசுருப்புடுங்கியானுவோ
மைக்கப் புடுங்கி அடிச்சிகிட்டு
சட்டசபைல கபடி விளையாடுறானுவ!

4 comments:

நவீன பாரதி said...

//மசுருப்புடுங்கியானுவோ
மைக்கப் புடுங்கி அடிச்சிகிட்டு
சட்டசபைல கபடி விளையாடுறானுவ!
//

அன்றொரு சுதந்திரம் கண்டோம்! -இன்றரசியல்
செய்வோர்க்கு அடிமையாச் சென்றோம்!
வாக்கு அளிப்பதோர் கடமை - இங்கே
ஐந்தாண்டு காலத்தில் அதுவுமோர் மடமை!

புதுமை விரும்பி said...

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்கள்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நல்ல கவிதை.

உங்களுக்குப் பிடித்த புத்தகப்பட்டியல் சுவாரசியமாக இருக்கிறது. அவற்றைப்பற்றியும் எழுதுங்களேன்.

பாரதி தம்பி said...

இயல்பான கவிதை..நல்ல ரசனை..வாழ்த்துக்கள்.